(உ.உதயகாந்த்)
ஆலையடிவேம்பு மகாசக்தி சிக்கன கடனுதவு கூட்டுறவுச்சங்கத்தின் தலைமைக்
காரியாலய வளாகத்தில் காணப்படுகின்ற ஒன்றுகூடல் மண்டபத்தினை தற்காலத் தேவைகளுக்கமைய
நவீன முறையில் விஸ்தரித்து மீளமைப்பதற்கான அடிக்கல் நடும் வைபவம் கடந்த
06.09.2013, வெள்ளிக்கிழமை பி.ப. 4.30 மணிக்கு நடைபெற்றது.
இந்நிகழ்விற்கு பிரதம அதிதியாக அம்பாறை மாவட்ட பாராளுமன்ற
உறுப்பினர் பி.எச்.பியசேன அவர்களும் சிறப்பு அதிதிகளாக ஆலையடிவேம்பு பிரதேச
செயலாளர் வே.ஜெகதீசன் மற்றும் கல்முனை பிராந்திய கூட்டுறவு உதவி ஆணையாளர்
வை.எல்.எம்.பஹ்றுதீன் ஆகியோரும் கௌரவ அதிதிகளாக கல்முனை பிராந்திய கூட்டுறவு
அபிவிருத்தி உத்தியோகத்தர் எம்.சி.ஜலால்தீன், கோளாவில் பெருநாவலர் வித்தியாலய
அதிபர் வெ.கனகரெத்தினம் மற்றும் ஆலையடிவேம்பு பலநோக்கு கூட்டுறவுச்சங்கத்தின்
தலைவர் க.நாராயணன் அவர்களும் கலந்துகொண்டு கட்டிடத்திற்கான அடிக்கற்களை நாட்டிவைத்தனர்.
‘தயட்ட கிருள’ தேசிய அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் கீழ் பாராளுமன்ற
உறுப்பினரின் பன்முகப்படுத்தப்பட்ட 0.9 மில்லியன் ரூபாய் முதற்கட்ட நிதி ஒதுக்கீட்டில்
இவ் ஒன்றுகூடல் மண்டபத்தின் விஸ்தரிப்பு வேலைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளமை
குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment