Wednesday, 18 September 2013

அன்றாட மின்சாரப் பாவனையை சிக்கனப்படுத்துவதன் அவசியம் விழிப்புணர்வு கருத்தரங்கு


(உ.உதயகாந்த்)

கொழும்பு, கிருலப்பனையில் தமது தலைமைப் பிராந்திய அலுவலகத்தைக் கொண்ட Practical Action நிறுவனத்தின் ஏற்பாட்டில், ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் வேதநாயகம் ஜெகதீசன் அவர்களின் தலைமையில் அன்றாட மின்சாரப் பாவனையை சிக்கனப்படுத்துவதன் அவசியம் தொடர்பான செயன்முறை விளக்கங்களையும் விழிப்புணர்வூட்டலையும் உள்ளடக்கிய மாபெரும் கருத்தரங்கொன்று கடந்த 13.09.2013, வெள்ளிக்கிழமை ஆலையடிவேம்பு பிரதேச செயலக நவரெட்ணராஜா கலையரங்கில் இருகட்டங்களாக நடாத்தப்பட்டது.

Practical Action நிறுவனத்தின் நிகழ்ச்சித்திட்ட முகாமையாளரும் பொறியியலாளருமான எஸ்.கே.ரோஹித ஆனந்த மற்றும் நிகழ்ச்சித்திட்ட உத்தியோகத்தர் திருமதி.பி.ஜி.எஸ்.விஜேதிலக ஆகியோரின் பிரசன்னத்துடன் இடம்பெற்ற இக்கருத்தரங்கில், வளவாளர்களாகக் கலந்துகொண்ட வாழ்வாதாரத்துறை நிபுணர் எஸ்.கமலநாதன் மற்றும் சமுக ஒருங்கிணைப்பு நிபுணர் திருமதி.அனுலா அன்ரன் ஆகியோர் மின்சாரத்தைச் சிக்கனப்படுத்தும் வழிமுறைகள் தொடர்பான செயன்முறை விளக்கங்களையும் அதற்கான படிமுறைகளையும் தெளிவுபடுத்தினர்.
இக்கருத்தரங்கு முதற்கட்டமாக அன்றைய தினம் காலை 9.30 மணிக்கு ஆலையடிவேம்பு பிரதேச செயலக ஊழியர்களுக்கும், அடுத்த கட்டமாக பி.ப. 3.00 மணிக்கு ஆலையடிவேம்பு பிரதேசத்திலுள்ள கிராமியமட்ட சமுகக்குழுக்களின் அங்கத்தவர்களுக்கும் நடாத்தப்பட்டதுடன் பங்குபற்றிய அனைவருக்கும் மின்சாரச் சிக்கனம் தொடர்பான கையேடுகளும் வழங்கப்பட்டன. 









    

No comments: