Wednesday, 25 September 2013
மூன்றாம் கட்ட டெங்கு ஒழிப்பு சிரமதான வேலைத்திட்ட முன்னெடுப்புக்கள்
மூன்றாம் கட்ட டெங்கு ஒழிப்பு சிரமதான வேலைத்திட்ட முன்னெடுப்பு க்கள்
மாவட்ட மட்ட ஆங்கில தின போட்டிகள்
(உ.உதயகாந்த்)
அம்பாறை மாவட்ட பாடசாலைகளுக்கு இடையிலான மாவட்ட மட்ட ஆங்கில தின போட்டிகள் மாவட்ட கல்வி அலுவலகத்தின் ஏற்பாட்டில் இன்று 24.09.2013ஆம் திகதி சம்மாந்துறையில் இடம்பெற்றபோது கனிஷ்ட மாணவர்களுக்கான நாடகப் போட்டியானது சது / தாறுஸ்ஸலாம் மஹா வித்தியாலயத்தில் ஏற்பாடு செய்யப்பட்டு நடாத்தப்பட்டது.
இப் போட்டி நிகழ்வில் கனிஷ்ட மாணவர்களுக்கான நாடகப் போட்டியில் பலத்த போட்டியின் மத்தியில் பல சவால்களை வெற்றிகொண்டு கோட்ட மட்டத்திலும் வலய மட்டத்திலும் முதலிடம் பெற்ற கார்மேல் பற்றிமா தேசிய பாடசாலையின் மாணவ மாணவிகள் பங்கேற்று இச் சுற்றில் பங்கு கொண்ட பல பாடசாலைகளுடன் போட்டியிட்டு இச் சுற்றிலும் முதலிடத்தினை தம்வசப்படுத்தி சாதனை படைத்துள்ளனர்
Wednesday, 18 September 2013
13 வயது சிறுமியை வல்லுறவுக்குட்படுத்தியவர் கைது
அக்கரைப்பற்று, ஆலையடிவேம்புப் பிரதேசத்தில் 13 வயதுச் சிறுமி ஒருவரை வல்லுறவுக்கு உட்படுத்தியதாகக் கூறப்படும் 16 வயதான சிறுவன் ஒருவனை நேற்று சனிக்கிழமை மாலை கைதுசெய்துள்ளதாக அக்கரைப்பற்று பொலிஸார் தெரிவித்தனர்.
கைதுசெய்யப்பட்ட 16 வயதான இந்தச் சிறுவன், இந்தச் சிறுமியை நேசித்து வந்துள்ளதாகவும் இவர் கடந்த இரு தினங்களாக இந்தச் சிறுமியை வல்லுறவுக்கு உட்படுத்தியததாகவும் இந்தச் சிறுமியின் பெற்றோர், பொலிஸில் செய்த முறைப்பாட்டில் தெரிவித்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து சந்தேக நபரை கைதுசெய்ததாகவும் பொலிஸார் கூறினர்.
பாதிக்கப்பட்ட சிறுமி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சந்தேக நபரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கையை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

அன்றாட மின்சாரப் பாவனையை சிக்கனப்படுத்துவதன் அவசியம் விழிப்புணர்வு கருத்தரங்கு
(உ.உதயகாந்த்)
கொழும்பு, கிருலப்பனையில் தமது தலைமைப் பிராந்திய
அலுவலகத்தைக் கொண்ட Practical Action நிறுவனத்தின் ஏற்பாட்டில், ஆலையடிவேம்பு
பிரதேச செயலாளர் வேதநாயகம் ஜெகதீசன் அவர்களின் தலைமையில் அன்றாட மின்சாரப் பாவனையை
சிக்கனப்படுத்துவதன் அவசியம் தொடர்பான செயன்முறை விளக்கங்களையும் விழிப்புணர்வூட்டலையும்
உள்ளடக்கிய மாபெரும் கருத்தரங்கொன்று கடந்த 13.09.2013, வெள்ளிக்கிழமை
ஆலையடிவேம்பு பிரதேச செயலக நவரெட்ணராஜா கலையரங்கில் இருகட்டங்களாக நடாத்தப்பட்டது.
Practical Action நிறுவனத்தின் நிகழ்ச்சித்திட்ட
முகாமையாளரும் பொறியியலாளருமான எஸ்.கே.ரோஹித ஆனந்த மற்றும் நிகழ்ச்சித்திட்ட உத்தியோகத்தர்
திருமதி.பி.ஜி.எஸ்.விஜேதிலக ஆகியோரின் பிரசன்னத்துடன் இடம்பெற்ற இக்கருத்தரங்கில்,
வளவாளர்களாகக் கலந்துகொண்ட வாழ்வாதாரத்துறை நிபுணர் எஸ்.கமலநாதன் மற்றும் சமுக
ஒருங்கிணைப்பு நிபுணர் திருமதி.அனுலா அன்ரன் ஆகியோர் மின்சாரத்தைச்
சிக்கனப்படுத்தும் வழிமுறைகள் தொடர்பான செயன்முறை விளக்கங்களையும் அதற்கான
படிமுறைகளையும் தெளிவுபடுத்தினர்.
இக்கருத்தரங்கு முதற்கட்டமாக அன்றைய தினம் காலை 9.30
மணிக்கு ஆலையடிவேம்பு பிரதேச செயலக ஊழியர்களுக்கும், அடுத்த கட்டமாக பி.ப. 3.00
மணிக்கு ஆலையடிவேம்பு பிரதேசத்திலுள்ள கிராமியமட்ட சமுகக்குழுக்களின்
அங்கத்தவர்களுக்கும் நடாத்தப்பட்டதுடன் பங்குபற்றிய அனைவருக்கும் மின்சாரச்
சிக்கனம் தொடர்பான கையேடுகளும் வழங்கப்பட்டன.
Friday, 13 September 2013
அக்கரைப்பற்று பொலிஸ் நிலையத்தின் ஏற்பாட்டில் விசேட பூசை நிகழ்வு.
இலங்கை பொலிஸ் சேவையின் 147 வது ஆண்டு நிறைவினை முன்னிட்டு பொலிஸ் திணைக்கள பொலிஸ்மா அதிபர் என்.இளங்ககோனிற்கும், பொலிஸ் திணைக்களத்திற்கும் ஆசி வேண்டி ஆலையடிவேம்பு வம்மியடிப் பிள்ளையார் ஆலயத்தில் விசேட பூசை நிகழ்வினை அக்கரைப்பற்று பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஜனாப் ஹாஜா முஹைதீன் தலைமையில் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு 2013.09.03 ஆம் திகதி செவ்வாய்கிழமை மிகவும் சிறப்பாக நடாத்தப்பட்டது.
இப் பூசை நிகழ்வினை சிறப்பிக்குமுகமாக ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தின் பிரதேச செயலாளர் வே.ஜெகதீசன் , பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் மற்றும் பொதுமக்களும் பொலிசதிகாரிகளும் கலந்துகொண்டு சிறப்பித்தார்கள்.
மகாசக்தி சிக்கன கடனுதவு கூட்டுறவுச்சங்கத்தின் ஒன்றுகூடல் மண்டபத்தினை மீளமைப்பதற்கான அடிக்கல் நடும் வைபவம்
(உ.உதயகாந்த்)
ஆலையடிவேம்பு மகாசக்தி சிக்கன கடனுதவு கூட்டுறவுச்சங்கத்தின் தலைமைக்
காரியாலய வளாகத்தில் காணப்படுகின்ற ஒன்றுகூடல் மண்டபத்தினை தற்காலத் தேவைகளுக்கமைய
நவீன முறையில் விஸ்தரித்து மீளமைப்பதற்கான அடிக்கல் நடும் வைபவம் கடந்த
06.09.2013, வெள்ளிக்கிழமை பி.ப. 4.30 மணிக்கு நடைபெற்றது.
இந்நிகழ்விற்கு பிரதம அதிதியாக அம்பாறை மாவட்ட பாராளுமன்ற
உறுப்பினர் பி.எச்.பியசேன அவர்களும் சிறப்பு அதிதிகளாக ஆலையடிவேம்பு பிரதேச
செயலாளர் வே.ஜெகதீசன் மற்றும் கல்முனை பிராந்திய கூட்டுறவு உதவி ஆணையாளர்
வை.எல்.எம்.பஹ்றுதீன் ஆகியோரும் கௌரவ அதிதிகளாக கல்முனை பிராந்திய கூட்டுறவு
அபிவிருத்தி உத்தியோகத்தர் எம்.சி.ஜலால்தீன், கோளாவில் பெருநாவலர் வித்தியாலய
அதிபர் வெ.கனகரெத்தினம் மற்றும் ஆலையடிவேம்பு பலநோக்கு கூட்டுறவுச்சங்கத்தின்
தலைவர் க.நாராயணன் அவர்களும் கலந்துகொண்டு கட்டிடத்திற்கான அடிக்கற்களை நாட்டிவைத்தனர்.
‘தயட்ட கிருள’ தேசிய அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் கீழ் பாராளுமன்ற
உறுப்பினரின் பன்முகப்படுத்தப்பட்ட 0.9 மில்லியன் ரூபாய் முதற்கட்ட நிதி ஒதுக்கீட்டில்
இவ் ஒன்றுகூடல் மண்டபத்தின் விஸ்தரிப்பு வேலைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளமை
குறிப்பிடத்தக்கது.
Wednesday, 11 September 2013
இரண்டாம் கட்ட டெங்கு ஒழிப்பு சிரமதான வேலைத்திட்டம்
( எஸ்.ஜே.பிரேம் ஆனந்த்)
ஆலையடிவேம்பு பிரதேசம் முழுவதும் கடந்த 06-09-2013 அன்று பிரதேச செயலாளர் வேதநாயகம் ஜெகதீசன் தலைமையில் ஆரம்பித்துவைக்கப்பட்ட டெங்கு ஒழிப்பு சிரமதான வேலைத்திட்டத்தின் இரண்டாம் கட்டப் பணிகள் 10-09-2013, செவ்வாய்க்கிழமை காலை மேலும் சில இடங்களில் முன்னெடுக்கப்பட்டன.
இவ் வேலைத்திட்டத்திற்கு இணைப்பாளராக பிரதேச செயலாளரால் நியமிக்கப்பட்டுள்ள மக்கள் தொடர்பாடல் உத்தியோகத்தர் காசுபதி கிரிசாந்தன் அவர்களின் மேற்பார்வையின் கீழ் அக்கரைப்பற்று – 7/1 இராம கிருஸ்ண மிசன் மகா வித்தியாலயம், அக்கரைப்பற்று – 8 விவேகானந்தா வித்தியாலயம், கண்ணகிகிராமம் கண்ணகி வித்தியாலயம் ஆகிய பாடசாலை வளாகங்கள், வாச்சிக்குடா ஸ்ரீ மகா பெரியதம்பிரான் ஆலய வளாகம், அக்கரைப்பற்று – 8/3 பலநோக்கு கூட்டுறவுச்சங்க வளாகம் என்பவற்றிலும் வடிகான்கள் அமையப்பெற்றுள்ளதும் மழைக்காலங்களில் வெள்ளநீர் வழிந்தோடும் வீதிகளுமான அக்கரைப்பற்று – 7/4 வீரமாகாளி அம்மன் ஆலய வீதி, அக்கரைப்பற்று – 8/1 முதலியார் வீதி, அக்கரைப்பற்று – 7 ஸ்ரீ இராம கிருஷ்ணா தேசிய கல்லூரி வீதி, அக்கரைப்பற்று – 7/1 சிவா பேக்கரி வீதி ஆகிய இடங்களில் சிரமதான நிகழ்வுகள் நடைபெற்றன.
இப் பரந்த வேலைத்திட்டத்தில் பொதுச் சுகாதாரப் பரிசோதகர் பி.கேதீஸ்வரன், கிராமசேவை உத்தியோகத்தர்கள், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் கீழ் இணைக்கப்பட்டுள்ள அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், பொலிஸ் உத்தியோகத்தர்கள், சிவில் பாதுகாப்புக்குழு உறுப்பினர்கள், கிராமிய அபிவிருத்திச்சங்க மற்றும் மாதர் அபிவிருத்திச்சங்க உறுப்பினர்களுடன் பொதுமக்களும் பங்கெடுத்தனர்.
இந்த டெங்கு ஒழிப்பு சிரமதான வேலைத்திட்டத்தின் மூன்றாம் கட்டப் பணிகள் ஆலையடிவேம்பு பிரதேசத்தின் ஏனைய சில பகுதிகளில் எதிர்வரும் 12.09.2013, வியாழக்கிழமை முன்னெடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Subscribe to:
Posts (Atom)