Wednesday, 1 April 2020

உலர் உணவுப் பொதிகள் இன்று வழங்கி வைக்கப்பட்டது.

haran
(எம்.எம்.ஜபீர்)
நாவிதன்வெளி பிரதேச செயகப் பிரிவின் கீழுள்ள மத்தியமுகாம் சமுர்த்தி வங்கியினால் கொரோனா வைரஸ் தாக்கத்தினை கட்டுப்படுத்தும் நோக்கில் அமுல்படுத்தப்பட்ட ஊரடங்குச் சட்டத்தினால் பாதிக்கப்பட்ட புதிதாக சமுர்த்தி நிவாரணம் பெறும் குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொதிகள் இன்று வழங்கி வைக்கப்பட்டது.




நாவிதன்வெளி பிரதேச செயலாளர் எஸ்.ரங்கநாதனின் வழிகாட்டலில் சமுர்த்தி சமுதாய அடிப்படை அமைப்புகளின் ஊடாக மத்தியமுகாம் சமுர்த்தி வங்கி பிரிவில் முதற்கட்டமாக புதிதாக சமுர்த்தி நிவாரணம் பெறும் 542 குடும்பங்களுக்கு உலர் உணவு பொதிகள் வழங்கும் நிகழ்வு சமுர்த்தி வங்கி முகாமையாளர் ஆர்.வசந்தகுமார் தலைமையில் முன்னெடுக்கப்பட்டது.

இவ் உலர் உணவுப் பொதிகள் சாளம்பைக்கேணி-01 சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் பிரிவிலும் இன்று வழங்கப்பட்டது. இதில் மத்தியமுகாம் சமுர்த்தி வங்கி முகாமையாளர் ஆர்.வசந்தகுமார், சாளம்பைக்கேணி-01 சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் ஏ.ஏ.லத்தீப், மத்தியமுகாம் சமுர்த்தி வங்கி காசாளர் ஏ.ஜெ.முஜாஹித், சமுர்த்தி சமுதாய அடிப்படை அமைப்பின் தலைவர் ஏ.எம்.றபீக், சவளக்கடை பொலிஸ் நிலைய உத்தியோகத்தர்கள், பயனாளிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.









மத்தியமுகாம் சமுர்த்தி வங்கியினால் ஊரடங்கால் பாதிக்கப்பட்டோருக்கு உலர் உணவு பொருட்கள் வழங்கி வைப்பு Rating: 4.5 Diposkan Oleh: Dicksith

No comments: