Friday, 3 April 2020

உணவு தேடும் தெரு விலங்குகள் 

haran


கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக நாட்டில் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில் தெரு விலங்குகள் வீதியோரம் உணவு தேடி அலைந்து திரிவதை காண முடிகிறது.



மட்டக்களப்பு மாவட்டம், வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உணவகங்கள், மீன் சந்தைகள், மரக்கறிக் கடைகள் உட்பட அனைத்து வியாபார நிலையங்களும் மூடப்பட்டுள்ளன.

குறித்த வியாபார நிலையங்களில் மனிதப் பாவனைக்கு உதவாத உணவுகளை குறித்த பகுதிகளில் கட்டாக்காலியாக திரியும் விலங்குகளுக்கு வியாபாரிகள் வழங்குவது வழக்கம்.

ஆனால் தற்போது அனைத்து வியாபார நிலையங்களும் மூடப்பட்டுள்ளதால் அப்பகுதியில் உணவு உட்கொண்டு பழக்கப்பட்ட மாடு, ஆடு, நாய், பூனை ஆகிய விலங்குகள் உணவு தேடி அலைந்து திரிவதை அவதானிக்க முடிகிறது.





உணவு தேடி அலைந்து திரியும் தெரு விலங்குகள் Rating: 4.5 Diposkan Oleh: Dicksith

No comments: