Thursday, 30 April 2020

வீட்டுத்தோட்டங்களை அமைப்போம்

haran


'சௌபாக்கியா' எனும் 10 இலட்சம் வீட்டுத்தோட்டங்களை அமைப்போம் எனும் தொனிபொருளில் அரசாங்கம் முன்னெடுத்துள்ள வேலைத்திட்டம் தேசிய ரீதியில் இடம்பெற்று வருகின்றது.

Wednesday, 29 April 2020

தனிமைப்படுத்தப்பட்டிருந்த 75 பேர் விடு வந்தனர்

haran


அம்பாறை மாவட்டத்தின் அக்கரைப்பற்றில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர் என அடையாளம் காணப்பட்ட நபர்களுடன் நேரடி மற்றும் இரண்டாம் நிலை தொடர்புகளைப் பேணியவர்கள் என இனங்காணப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டிருந்த 75 பேர் தமது தனிமைப்படுத்தல் காலத்தினை நிறைவு செய்து நேற்று (28) தத்தமது வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

Tuesday, 28 April 2020

கொரோனா தர்மசங்கரி மைதானத்திலேயே சந்தை நடவடிக்கை

haran

(வி.சு)
கொரோனா அச்சுறுத்தல் நீங்கும் வரை அக்கரைப்பற்று தர்மசங்கரி மைதானத்திலேயே சந்தை நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என ஆலையடிவேம்பு பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி எஸ்.அகிலன் தெரிவித்தார்.

Friday, 17 April 2020

haran

கொரோனா வைரஸ் அனர்த்தம் காரணமாக அம்பாறை மாவட்டத்தில் சட்டவிரோத நடவடிக்கைகள் அதிகரித்துள்ளதாக கல்முனை மதுவரி நிலைய பொறுப்பதிகாரி போ.செல்வகுமார் தெரிவித்தார்.


Sunday, 12 April 2020

அக்கரைப்பற்றில் பெண்ணொருவருக்கு கொரோனா

haran

(W. டிக்க்ஷித்) (பாறுக் ஷிஹான்)

அக்கரைப்பற்றில் பெண்ணொருவருக்கு கொரோனா தொற்றியுள்ளனமை இனங்காணப்பட்டுள்ளதாக கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைப் பணிப்பாளர் கு.சுகுணன் தெரிவித்தார்.

Wednesday, 8 April 2020

அம்பாறை மாவட்டத்தில் முதலாவது நோயாளி பதிவு

haran

ஆர் .நடராஜன்

அம்பாறை மாவட்டத்தில் முதலாவது கொரோனா நோயாளி அக்கரைப்பற்று பிரதேசத்தில்  இனங்காணப்பட்டுள்ளார்

மக்கள் தொடர்புகொள்ள இலக்கங்கள்

haran
கொரானா வைரஸ் காரணமாக ஏற்பட்டுள்ள அசாதாரண நிலையை கருத்திற்கொண்டு மக்களது பிரச்சினைகளை தெரிவிக்கவும் தகவல்களை பெற்றுக்கொள்ளவும் மாகாண வழிநடாத்தல் குழுவொன்று கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத் அவர்களின் அறிவுறுத்தலுக்கமைய ஏற்படுத்தப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண ஆளுநரின் ஊடகச்செயலாளர் ருசிர டிலான் மதுசங்க தெரிவித்தார்

வியாபார நடவடிக்கையில் ஈடுபட அனுமதி மறுப்பு

haran
ஊரடங்கு தளர்வின் போது பொது மக்கள் ஒன்றுகூடுவதனை தவிர்க்கும் முகமாக நாளை 09.04.2020 ம் திகதி தம்பிலுவில் மத்திய சந்தையினுள் வியாபார நடவடிக்கையில் ஈடுபட அனுமதி வழங்கப்படமாட்டாது  என்பதுடன் சந்தையினுள் வியாபாரம் செய்வோர் கலைமகள் பாடசாலை தொடக்கம் திருக்கோவில் மணிக்கூட்டு கோபுரம் வரையிலான வீதியின் இருமருங்கிலும் திருக்கோவில் பிரதேச சபையினரால் வழங்கப்படும் இடங்களில் வியாபாரம் செய்ய அனுமதிக்கப்படும்.

Sunday, 5 April 2020

சுகாதார நடைமுறையுடன் வியாபாரம் செய்யவும்

haran
(பாறுக் ஷிஹான்)
அம்பாறை மாவட்டத்தில் ஊரடங்கு சட்டம் நாளை திங்கட்கிழமை(6) தளர்த்தப்பட உள்ள நிலையில் கல்முனை பிராந்தியத்தில் எவ்வாறான நடைமுறைகளை வியாபாரிகள் பின்பற்ற வேண்டும் என்ற கலந்துரையாடல் ஞாயிற்றுக்கிழமை(5) முற்பகல் கல்முனை மாநகர சபை கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

நாளை அக்கரைப்பற்று பொதுச்சந்தை மூடப்பட்டிருக்கும்

haran
(வி.சுகிர்தகுமார்) 
நாளை காலை ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டாலும் அக்கரைப்பற்று பொதுச்சந்தை மூடப்பட்டிருக்கும் என அக்கரைப்பற்று பொலிசார் ஒலிபெருக்கி மூலம் மக்களுக்கு அறிவித்தல் வழங்கி வருகின்றனர்.

Friday, 3 April 2020

உணவு தேடும் தெரு விலங்குகள் 

haran


கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக நாட்டில் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில் தெரு விலங்குகள் வீதியோரம் உணவு தேடி அலைந்து திரிவதை காண முடிகிறது.

Thursday, 2 April 2020

ஊரடங்கை மீறிய 26 பேர் கைது

haran
திருக்கோவில் பொலிஸ் பிரிவில் இதுவரை ஊரடங்கை மீறிய 26 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக நிலைய பொறுப்பதிகாரி எஸ்.எஸ். ஜயவீர தெரிவித்தார்.

விபத்தில் ஒருவர் பலி

haran
(செங்கலடி நிருபர் - சுபா)
மட்டக்களப்பு ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள சவுக்கடி பிதேசத்திலுள்ள பண்ணை ஒன்றில் சென்ற உழவு இயந்திரம் பனை மரத்துடன் மோதி விபத்துக்குள்ளானதில் அதை செலுத்திச் சென்ற சாரதி உயிரிழந்த சம்பவம் நேற்று புதன்கிழமை மாலையில் இடம்பெற்றுள்ளதாக ஏறாவூர் பொலிசார் தெரிவித்தனர்.


Wednesday, 1 April 2020

தொழிலை இழந்த குடும்பங்களுக்கான நிவாரணப்பணி

haran
(வி.சுகிர்தகுமார்)
அம்பாரை மாவட்டம் ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் பிரிவில் கொரோனா அச்சம் காரணமாக தொழிலை இழந்த குடும்பங்களுக்கான நிவாரணப்பணியை புலம்பெயர் உறவுகளின் பங்களிப்போடு தனியார் தொண்டு நிறுவனங்களும் அமைப்புக்களும் இணைந்து முன்னெடுத்து வருகின்றனர்.


உலர் உணவுப் பொதிகள் இன்று வழங்கி வைக்கப்பட்டது.

haran
(எம்.எம்.ஜபீர்)
நாவிதன்வெளி பிரதேச செயகப் பிரிவின் கீழுள்ள மத்தியமுகாம் சமுர்த்தி வங்கியினால் கொரோனா வைரஸ் தாக்கத்தினை கட்டுப்படுத்தும் நோக்கில் அமுல்படுத்தப்பட்ட ஊரடங்குச் சட்டத்தினால் பாதிக்கப்பட்ட புதிதாக சமுர்த்தி நிவாரணம் பெறும் குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொதிகள் இன்று வழங்கி வைக்கப்பட்டது.