கலாசார
அலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையுடன் ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தால் ஒழுங்கு
செய்யப்பட்டிருந்த பிரதேச கலை இலக்கிய விழா இன்று (15) மாலை பிரதேச
செயலகக் கலாசார மண்டபத்தில் இடம்பெற்றது.
கலாசார
அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி. நவப்பிரியா பிரசாந்த் ஏற்பாடு செய்திருந்த
குறித்த விழாவின் பிரதம விருந்தினராக ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் வி.ஜெகதீஸன் கலந்து
சிறப்பித்ததுடன், விசேட விருந்தினராக உதவி பிரதேச
செயலாளர் ரி.கஜேந்திரனும், கௌரவ விருந்தினர்களாக ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தின்
பதவிநிலை உத்தியோகத்தர்களும் வருகை தந்திருந்தனர்.
பிரதேச
செயலாளரது தலைமையுரையுடன் ஆரம்பமான நிகழ்வுகளில் அம்பாறை மாவட்டத்தின் தமிழ்
கலாசார முக்கியத்துவம் வாய்ந்த ஆலையடிவேம்பு பிரதேசத்தின் கிராமிய, கலை, கலாசாரப்
பாரம்பரியங்களை வெளிக்காட்டும் மேடை நிகழ்வுகள் அரங்கேற்றப்பட்டதுடன், அரச இலக்கிய விழாவின் 60 ஆவது வைர
விழாவினை முன்னிட்டு கலாசார அலுவல்கள் திணைக்களம் மற்றும் ஆலையடிவேம்பு பிரதேச
செயலகம் என்பன இணைந்து நடாத்திய பிரதேச இலக்கியப் போட்டித் தொடரில்
வெற்றியீட்டியிருந்த பாடசாலை மாணவர்கள் மற்றும் ஆலையடிவேம்பு பிரதேசத்தின் கலைஞர்களுக்கு
பரிசில்களும் சான்றிதழ்களும் அங்கு வழங்கிவைக்கப்பட்டன.
No comments:
Post a Comment