Tuesday, 12 December 2017

பூமியில் சமாதானம் நிலவும்'

haran

ஜெனிவாவைத்தளமாகக்கொண்ட சர்வதேச சமாதானஆதாரங்களுக்கான அமைப்பானது வருடாந்தம் உலகளாவிய ரீதியில் நடாத்திவரும் ' பூமியில் சமாதானம் நிலவும்' எனும் தலைப்பிலான 20 வது சர்வதேச சித்திரப்போட்டியில்
இவ்வாண்டு 5 வயது தொடக்கம் 7 வயதுப்பிரிவில் முதலாவது இடம் இலங்கைகே கிடைத்திருக்கின்றது.



 மட்டக்களப்பு கோட்டைமுனை கனிஷ;ட வித்தியாலயத்தில் கல்வி பயிலும் செல்வன் நகுலேஸ்வரன் கேமலக்ஷhன் எனும் மாணவனே இப்போட்டியில் முதலிடத்தினைப்பெற்றிருக்கின்றார்.

 உலகளாவிய ரீதில் பங்குபற்றிய பல்லாயிரக்கணக்கான சித்திரங்களுக்குள் இவரது சித்திரம் முதலாமிடத்தைப்பெற்றுள்ளமை நம் நாட்டுக்கும் குறிப்பாக மட்டக்களப்புக்கும் பெருமைத்தேடித்தந்திருக்கின்றது.

 அத்தோடு நமது மாவட்டத்திலிருந்து பங்குபற்றிய செல்வி ந. சஞ்சனா-கோட்டைமுனை கனிஷ;ட வித்தியாலயம், செல்வி ச.தம்மிக்கா -கோட்டைமுனை கனிஷ;ட வித்தியாலயம், செல்வி ந. தருணிக்ஷh – புனித சிசிலியா பெண்கள் பாடசாலை, செல்வி சி.சஷ;ஷpனி ஆகிய நான்கு மாணவியருக்கு பங்குபற்றுதலுக்கான சான்றிதழ்களும் கிடைத்திருக்கின்றமை குறிப்பிடத்தக்கது. இம்மாணவர்களின் திறனைப்பாராட்டுவோம்.

No comments: