ஆலையடிவேம்பு
பிரதேசத்தில் இயங்கிவருகின்ற மறுமலர்ச்சி முன்பள்ளியிலிருந்து தமது பாலர்
கல்வியினை முடித்து அடுத்த வருடம் முதல் அரச பாடசாலைகளுக்குச் செல்லவுள்ள
சிறார்களுக்கான விடுகை விழாவும் சான்றிதழ்கள் வழங்கும் வைபவமும் இன்று (14) காலை பனங்காட்டில் இடம்பெற்றது.
ஆலையடிவேம்பு
பிரதேச செயலாளர் வி.ஜெகதீஸன் பிரதம அதிதியாகவும், பனங்காடு பிரதேச வைத்தியசாலையின்
வைத்திய அத்தியட்சகர் யு.எல்.எம்.சகில் மற்றும் ஆலையடிவேம்பு
பிரதேச முன்பிள்ளைப்பருவ அபிவிருத்தி உத்தியோகத்தர் வை.உஜெயந்தன் ஆகியோர் விசேட
அதிதிகளாகவும் கலந்துகொண்ட இவ்விழாவில் பனங்காடு கிராமத்தின் பொது அமைப்புக்களின்
பிரதிநிதிகளோடு குறித்த பாலர் பாடசாலையின் மாணவர்களும் அவர்களது பெற்றோர்களும் முழுமையாகக்
கலந்து சிறப்பித்திருந்தனர்.
அதிதிகள்
மாலையிட்டு வரவேற்கப்பட்டு மங்கல விளக்கேற்றலுடன் ஆரம்பமான குறித்த நிகழ்வுகளில்
சிறார்களின் பாடல், நடனங்கள் போன்ற கலை நிகழ்வுகள் பல மேடையேற்றப்பட்டதுடன்,
பிரதேச செயலாளரின் சிறப்புரையும் இடம்பெற்றிருந்தது.
நிகழ்வுகளின்
இறுதியில் பாலர் கல்வியினை முடித்த சிறார்களுக்குப் பிரதேச செயலாளர் உள்ளிட்ட
அதிதிகளால் சான்றிதழ்கள் வழங்கிவைக்கப்பட்டிருந்தன.
No comments:
Post a Comment