Sunday, 31 December 2017

தித்திக்கும் 2018 புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

எமது panakadu.com நிறுவன தித்திக்கும் 2018 புத்தாண்டு 





அனைத்து இனைய பாவனையாளர்களுக்கும் நல்வாழ்த்துக்கள்



 ஸ்தாபகர் நடராஜன் ஹரன் 
அவர்களின் வாழ்த்துச்செய்தி- மலர்ந்திருக்கும் புத்தாண்டு அனைவருக்கும் வளமான நிகழ்காலத்தைஉங்களுக்கு இனிமையையும்சுபீட்சத்தினையும்வெற்றியையும் ஏற்படுத்தும் புத்தாண்டாக அமைய இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் வாழ்துகிறேன். 


ஆலையடிவேம்பு பிரதேசலாளர் வீ.ஜெகதீசன் 


அவர்களின் வாழ்த்துச்செய்தி-  இச் 2018 ம் ஆண்டு ஆங்கில புத்தாண்டு எமது பிரதேச வாழ் 
அனைத்து மக்களதும் வாழ்வாதாரத்தில் சுபிட்ஷத்தை ஏற்படுத்தும் ஆண்டாக அமைய வாழ்த்துகின்றேன்






SMS வாழ்த்துக்கள்...
DEVATHIRAN----wish you a happy new year athiran and family & batticoloa
LOGITHAN------happy new year @ akkaraipattu  
SAPAN---------may every day of the new year glow with good cheer $                          happyiness for you &your family happy new year 2016
ANOYA -------wish ur happy new year @ monaragala
KARTHIK------wish..your..happy..new..year.2016 karthik and family 
                         @ thirukkovil 
VIJAY--------wishing you very  happy new year @ kolavil
SUGASHINI ---iniya puththaandu nal vazthukkal may you &the family enjoy a                     very health & prosperous year ahead. @ colombu
SABESH------wish ur happy new year 2016...may god bless                                         you...p.sabesh@ chenkalady


இனையப் பக்கத்தில் உங்களது படங்களுடன் வாழ்த்துக்களைத் தெரிவிக்க கீழுள்ள comment ல் TIPE செய்யுங்கள் அல்லது  sms (or) viber / whatsup ஊடாக  send +94 777 51 42 79 இலக்கத்திற்கு உங்கள் புகைப் படம் + வாழ்த்துக்களை   அல்லது

 email – haran139@gmail.com (or) panankadu.com@gmail.com ஊடாக அனுப்பலாம் 

haran

Thursday, 28 December 2017

விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.

haran
களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெரியகல்லாறு பகுதியில் அமைந்துள்ள தேவாலய வளாகத்துக்குள் கடந்த செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற படுகொலை சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்களுக்கு விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.



சந்தேகநபர்கள் களுவாஞ்சிக்குடி சுற்றுலா நீதிவான் நீதிமன்றில் பதில் நீதிவான் வினோபா இந்திரன் முன்னிலையில் இன்று (வியாழக்கிழமை) ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் எதிர்வரும் 2018 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 11 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

பெரியகல்லாறு அருளானந்தர் தேவாலயத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றின்போது, இருவருக்கிடையே இடம்பெற்ற வாய்த்தர்க்கம் கத்திக்குத்தாக மாறியதில் பெரியகல்லாறு முதலாம் குறிச்சி பிரதான வீதியைச் சேர்ந்த 23 வயதான ஜேசுதாசன் திமேசன் என்னும் இளைஞர் உயிரிழந்தார்.

இந்த படுகொலை சம்பவம் தொடர்பாக 54 வயதுடைய மார்க்கண்டு பரிமளராசா என்பவரும் அவருடைய மகனான 19 வயதுடைய பரிமளராசா அபிசனன் என்பவருமே கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சட்டவிரோதமாக மணல் அகழ்வில்

மட்டக்களப்பு மாவட்டத்தில் சட்டவிரோதமாக மணல் அகழ்வில் ஈடுபட்ட ஒன்பது வாகனங்களை கரடியனாறு பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

Wednesday, 27 December 2017

ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற வருட இறுதி பிரியாவிடை நிகழ்வு


ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தில் கடமையாற்றி, இவ்வருடத்தில் (2017) இடமாற்றம் பெற்று வேறு அரச அலுவலகங்களுக்குச் சென்ற மற்றும் ஓய்வுபெற்ற உத்தியோகத்தர்களின் சேவைகளைக் கௌரவிக்கும் நிகழ்வும் ஆண்டிறுதி விழாவும் இன்று (27) காலை ஆலையடிவேம்பு பிரதேச செயலகக் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றன.

Saturday, 23 December 2017

எதிர்ப்பு போராட்டம்

திருக்கோவில் பிரதேசத்தில் இல்மனைட் அகழ்வு மேற்கொள்ளப்பட உள்ளதாகவும் இதனால் பிரதேச மக்கள் பெரும் பாதிப்புகளை எதிர்கொள்ள நேரிடும் எனவும் இதை தடுத்து நிறுத்த   மாபெரும் எதிர்ப்பு போராட்டம்

Friday, 22 December 2017

ஆலையடிவேம்பு பிரதேச கலைஞர்கள் கௌரவிப்பு


கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையுடன் ஆலையடிவேம்பு பிரதேச செயலகமும் பிரதேச கலாசார அதிகார சபையும் இணைந்து இவ்வருடத்தின் மத்திய பகுதியில் ஏற்பாடு செய்திருந்த ‘கலைஞர் சுவதம்’ வேலைத்திட்டத்தில் பங்கெடுத்த ஆலையடிவேம்பு பிரதேச கலைஞர்களுக்குப் பாராட்டுச் சான்றிதழ்களும் பரிசுப்பொதிகளும் வழங்கும் வைபவம் ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தில் இன்று (22) காலை இடம்பெற்றது.

Wednesday, 20 December 2017

அவசர உணவுக் கலாசாரத்துக்கு அடிமைப்பட்டு அவஸ்தைப்படும் சந்ததி ஒன்றையே இன்று நாம் உருவாக்கி வைத்திருக்கின்றோம். - ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் வே.ஜெகதீஸன்.

பிரேம் ...
அடுத்தவர்கள் எம்மைக் குறைத்து மதிப்பிட்டு விடுவார்கள். அதனால் எம் அந்தஸ்து குறைந்துவிடும் என்ற குறுகிய மனப்பான்மையுடனேயே நாம் எமது இல்லத்து நிகழ்வுகளிலும் சரி, எமது பண்பாடு மற்றும் கலாசாரங்களோடு தொடர்புபட்ட எந்த நிகழ்வானாலும் சரி, இன்றைய நாகரிக யுகத்துக்குத் தகுந்த அவசர உணவுகளோடு அவற்றைக் கொண்டாட நினைக்கின்றோம். எதற்கெடுத்தாலும் பிரியாணி என்கிற செயற்கைச் சுவையூட்டிகளையும் நமக்கு நன்கு பரிச்சயமான மொனோசோடியம் குளுடமேட் என்ற விஞ்ஞானப் பெயரையுடையதும், மனித உடலுக்குப் பாதகமான புற்றுநோயை உண்டாக்கக்கூடிய இரசாயனக் கலவைகளைக் கொண்டதுமான அஜினமோடோ பாவிக்கப்பட்ட உணவுகளையும் எமது உணவுக் கலாசாரமாக மாற்றி வைத்திருக்கின்றோம் என்று ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் வேதநாயகம் ஜெகதீஸன் தெரிவித்தார்.

Tuesday, 19 December 2017

ஆலையடிவேம்பில் கிராமமட்ட தொண்டர் அமைப்புக்களுக்காக நடாத்தப்பட்ட போஷாக்கு மேம்பாட்டு செயலமர்வு


ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தினால் செயற்படுத்தப்பட்டுவரும் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கிராமங்களில் இனங்காணப்பட்டுள்ள போஷணைமட்டம் குறைவான குடும்பங்களை அதிலிருந்து விடுவிப்பதற்கான பல்துறை சார்ந்த செயற்பாட்டுத் திட்டத்தின் கீழ் கிராமமட்டங்களில் சேவையாற்றும் தொண்டர் அமைப்புக்கள் மற்றும் அரச உத்தியோகத்தர்களுக்கான ஒருநாள் போஷாக்கு மேம்பாடு தொடர்பான விழிப்புணர்வு செயலமர்வு நேற்று (19) ஆலையடிவேம்பு பிரதேச செயலகக் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றிருந்தது.

Friday, 15 December 2017

உதய சூரியன் சின்னத்தில்

புனர்வாழ்வளிக்கப்பட்ட தமிழ் விடுதலைப்புலிகள் கட்சி உதய சூரியன் சின்னத்தில்
எதிர்வரும் 2018 ஆம் ஆண்டு நடைபெறவிருக்கும் உள்ளுராட்சி மன்ற தேர்தலில் உதய சூரியன் சின்னத்தில் தமிழர் விடுதலைக் கூட்டணி கட்சியுடன் இணைந்து வெருகல் பிரதேசத்தில் போட்டியிடவுள்ளோம் என்கின்றார் புனர்வாழ்வளிக்கப்பட்ட தமிழ் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவர் கந்தசாமி இன்பராசா

2018 ஆம் ஆண்டு உள்ளுராட்சி மன்ற தேர்தலில் தொடர்பாக இன்று 15 திகதி வெருகல் பிரதேச சபைக்குட்டபட்ட மக்களுக்கான தெளிவூட்டல் மற்றும் செய்தியாளர் சந்திப்பின் போதெ அவர் இவ்வாறு தெரிவித்திருந்தார்.


அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்.....

நாம் முப்பது வருட கால போராட்டத்தின் பின்னர் புனர்வாழ்வளிக்கப்பட்டு சமூகமயப்படுத்தப்பட்டு ஜனநாயக ரீதியில் அரசியலுக்குள் நுழைந்து தற்போது மக்கள் மத்தியில் அரசியல் பணிகளில் தெசயற்பட தீர்மானித்துள்ளோம் அதன் படி தற்போது நிலவும் கூட்டமைப்பின் செயற்பாடுகளுக்கு மக்கள் மத்தியில் ஆதரவு அற்ற நிலையில் எனக்கு என்று ஒரு நிரந்தர அரசியல் பலத்தையும் கொள்கைகளையும் கொண்ட தமிழர் விடுதலைக் கூட்டணியுடன் இணைந்து எதிர்வரும் உள்ளுராட்சி மன்ற தேர்தலில் திருமலை மாவட்டத்தின் வெருகல் பிரதேச சபையில் போட்டியிடுவதற்காக தயாராகியுள்ளோம்.

அதன் பிரகாரம் தமிழர் விடுதலை கூட்டமைப்பின் தலைவர் ஆனந்த சங்கரியிடம் பேச்சுவார்த்தை நடத்தியதன் பின்னர் வேட்புமனுக்கள் தாக்கல் செய்து தற்போது களமிறங்கியுள்ளோம்.
இருந்தும் இவ்வளவு காலமாக போராளிகள் விடுதலைப்புலிகள் என நாம் மக்களுக்காகவே போராடினோம் மீண்டும் அவர்கள் மத்தியிலேயே அரசியல் களத்தில் இணைந்து செயற்படவுள்ளோம் ஆகையினால் எனது வேட்பாளர்களையும் கட்சியின் செயற்பாடுகளுக்கும் ஆதரவு வழங்குமாறு கேட்டுக் கொள்கிறோம். என அவர் கருத்துத் தெரிவித்தார்

இச்சந்திப்பின் போது வெருகல் பிரதேசத்தில் போட்டியிடுகின்ற வேட்பாளர்கள் அறிமுகம் செய்து கொண்டமையும் குறிப்பட்டத்தக்கது



புனர்வாழ்வளிக்கப்பட்ட தமிழ் விடுதலைப்புலிகள் கட்சி உதய சூரியன் சின்னத்தில் Rating: 4.5 Diposkan Oleh: Nadanasabesan samithamby

ஆலையடிவேம்பு பிரதேச கலை இலக்கிய விழாவும் பரிசளிப்பும்


கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையுடன் ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தால் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த பிரதேச கலை இலக்கிய விழா இன்று (15) மாலை பிரதேச செயலகக் கலாசார மண்டபத்தில் இடம்பெற்றது.

ஆலையடிவேம்பில் பாலூட்டும் தாய்மார்களுக்காக நடாத்தப்பட்ட போஷாக்கு மேம்பாட்டு செயலமர்வு


ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தினால் செயற்படுத்தப்பட்டுவரும் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கிராமங்களில் இனங்காணப்பட்டுள்ள போஷணை மட்டம் குறைவான குடும்பங்களை அதிலிருந்து விடுவிப்பதற்கான பல்துறை சார்ந்த செயற்பாட்டுத் திட்டத்தின் கீழ், பாலூட்டும் தாய்மார் மற்றும் தமது குழந்தைகளுக்கு மேலதிக உணவூட்டும் தாய்மாருக்கான போஷாக்கு மேம்பாடு தொடர்பான விழிப்புணர்வு செயலமர்வு அண்மையில் ஆலையடிவேம்பு பிரதேச செயலகக் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றிருந்தது.

Thursday, 14 December 2017

இன்றைய இளைஞர்கள் தமது கடமைகளை செய்யாதிருப்பது எமது நாட்டின் தலைவிதியையே தலைகீழாக்கும் ஒரு செயலுக்கு ஒப்பானதாகும். – ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் வி.ஜெகதீஸன்.


உங்கள் ஒவ்வொருவரையும் ஆரோக்கியத்தோடு பெற்று, வளர்த்து, ஆளாக்கியவகையில் உங்களது பெற்றோர் தம் கடமையைச் சரியாகச் செய்துள்ளனர். நீங்கள் பிறந்ததிலிருந்து உங்களுக்குவேண்டிய கல்வி, பராமரிப்பு மற்றும் இன்னோரன்ன வசதிகளையெல்லாம் இலவசமாக வழங்கியும், இன்றுவரை வழங்கிக்கொண்டிருப்பதன் மூலமும் இந்த நாட்டு அரசாங்கம் தனது கடமையைச் சரியாகச் செய்துகொண்டிருக்கின்றது. உங்களைக் கற்பித்த ஆசிரியர்கள் தங்கள் கடமையைச் சரியாகச் செய்தனர். உங்களுக்குத் தேவையான வசதிகளை அரசிடமிருந்து முறையாகப் பெற்றுக்கொடுக்கும் முகவர்களான அரச அதிகாரிகள் தங்களது கடமையைச் சரியாகச் செய்கின்றனர். அரசினால் செய்யமுடியாத சில மேலதிக உதவிகளை அவ்வப்போது உங்களுக்கு வழங்கி அரசுசாரா நிறுவனங்களின் பணியாளர்களும் தங்களது கடமைகளைச் சரியாகச் செய்துகொண்டிருக்கின்றனர். இவ்வாறு உங்களைச் சுற்றியுள்ள அனைவரும் தங்களது கடமைகளைச் சரியாகச் செய்து கொண்டிருக்கின்றபொழுதிலும் இந்த நாட்டின் நாளைய எதிர்காலத்தைத் தீர்மானிக்கவிருக்கும் மிகப்பெரும் சக்தியான இளைஞர்களாகிய நீங்கள் உங்களது கடமைகளைச் சரியாகச் செய்யாமலிருப்பது எமது இலங்கைத் திருநாட்டின் தலைவிதியையே தலைகீழாக்கும் ஒரு செயலுக்கு ஒப்பானதாகும் என ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் வேதநாயகம் ஜெகதீஸன் தெரிவித்தார்.

மறுமலர்ச்சி முன்பள்ளி மாணவர்களின் விடுகை விழா


ஆலையடிவேம்பு பிரதேசத்தில் இயங்கிவருகின்ற மறுமலர்ச்சி முன்பள்ளியிலிருந்து தமது பாலர் கல்வியினை முடித்து அடுத்த வருடம் முதல் அரச பாடசாலைகளுக்குச் செல்லவுள்ள சிறார்களுக்கான விடுகை விழாவும் சான்றிதழ்கள் வழங்கும் வைபவமும் இன்று (14) காலை பனங்காட்டில் இடம்பெற்றது.

Tuesday, 12 December 2017

பூமியில் சமாதானம் நிலவும்'

haran

ஜெனிவாவைத்தளமாகக்கொண்ட சர்வதேச சமாதானஆதாரங்களுக்கான அமைப்பானது வருடாந்தம் உலகளாவிய ரீதியில் நடாத்திவரும் ' பூமியில் சமாதானம் நிலவும்' எனும் தலைப்பிலான 20 வது சர்வதேச சித்திரப்போட்டியில்

ஆலையடிவேம்பில் சமுர்த்தி கெகுலு சிறுவர் கழகங்கள் மறுசீரமைப்பு




இவ்வருடத்துக்கான சமுர்த்தி சமுக அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் கீழ் ஆலையடிவேம்பு பிரதேச கிராம உத்தியோகத்தர் பிரிவுகளிலுள்ள கெகுலு சிறுவர் கழகங்களை மறுசீரமைத்து அக்கழகங்களுக்கான காகிதாதிகளை வழங்கிவைக்கும் நிகழ்வு இன்று (12) காலை ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது.

Saturday, 9 December 2017

பட்டதாரிகள் மனிதச்சங்கிலிப் போராட்டம்..

haran
அம்பாறை மாவட்ட வேலையற்ற பட்டதாரிகளுக்கு தொழில் வழங்குவதில் அரசாங்கத்தின் நிலைப்பாடு மற்றும் வேலையற்ற பட்டதாரிகளின் எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பான கலந்துரையாடலும், மனிதச்சங்கிலிப் போராட்டமும் இன்று (சனிக்கிழமை) இடம்பெற்றுள்ளது.

Saturday, 2 December 2017

பாப்புகள் பிடிபட்டுள்ளதால்..........

மட்டக்களப்பு நாவலடியில் இன்று காலை கர வலை தொழிலில் ஈடுபட்ட அனைத்து மீனவர்ககளின் வலை கலிலும் பாப்புகள் பிடிபட்டுள்ளதால் மக்கள் மத்தியில் பெரும் அச்சம் நிலவுவதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.