Thursday, 26 March 2020

haran
(பாறுக் ஷிஹான்)
கல்முனையில் அதிக எண்ணிக்கையில் வளையா மீன் கிலோ 250 க்கு அமோக விற்பனை செய்யப்படுகிறது.ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ள போதிலும் அம்பாறை மாவட்டம் கல்முனை பிராந்திய பொலிஸாரின் விசேட அனுமதியில் கடற்தொழிலாளர்கள் தத்தமது படகுகளை பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்டுள்ளனர்.

புதன்கிழமை(25) காலை அதிக எண்ணிக்கையில் வளையா மீன்கள் மீன் பிடிபட்டதுடன் கிலோ ருபா 250 க்கு நுகர்வோருக்கு விற்பனை செய்யப்பட்டது.இது தவிர அம்பாறை மாவட்டத்தின் கல்முனை புறநநகர்பகுதிகளில் ருபா 300 க்கு வளையா மீன் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

ஊரடங்கு சட்டத்தினால் கடந்த 3 நாட்களாக மிகவும் மோசமாக வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டிருந்த மீனவர்களுக்கு மகிழ்ச்சி நிறைந்த நாளாக இன்று காணப்பட்டது . இன்று ஒரு மீனவருக்கு சொந்தமான தோனிக்கு சுமார் 30 முதல் 50 இலட்சம் ரூபாய் பெறுமதியான மீன்கள் பிடிபட்டுள்ளன. மீன்களில் பெரும்பாலானவை வெளி மாவட்ட்ங்களுக்கும் விற்பனைக்காக அனுப்பிவைக்கப்பட்டது.

இதனால் மீனவர்கள் அரசாங்கத்திற்கு நன்றி தெரிவித்ததுடன் மிகுந்த மகிழ்ச்சியில் காணப்படுகின்றனர்.















கல்முனையில் அதிக எண்ணிக்கையில் வளையா மீன் கிலோ 250 க்கு அமோக விற்பனை Rating: 4.5 Diposkan Oleh: Dicksith

No comments: