Sunday, 29 March 2020

11 பேர் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

haran
(பாறுக் ஷிஹான்)
அம்பாறை அக்கரைப்பற்று வீதியில் அமைந்துள்ள பதுர் நகர் பதுர் பள்ளிவாசலில் வைத்து கைதான 16 பேரில் 11 பேர் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

கடந்த சனிக்கிழமை (28)இரவு இஷா தொழுகை நேரம் குறித்த பள்ளியின் முன்னால் ஒன்று கூடி இருந்த சிலர் அவ்வழியால் வந்த இராணுவத்தினர் கண்டு பள்ளிவாசலினுள் நுழைந்துள்ளனர்.

இதன்போது பள்ளிவாசலுக்குள் சென்று இராணுவத்தினர் மறைந்திருந்து 16 முஸ்லிம்களை கைது செய்து போலீசாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

இந்நிலையில் போலீசாரின் ஆரம்ப கட்ட விசாரணையின் பின்னர் கைது செய்யப்பட்ட 16 பேரில் ஐவர் விடுதலை செய்யப்பட்டு தற்போது 11 பேர் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் நீதிமன்றில் ஆஜர் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

அத்துடன் கடந்த சில தினங்களுக்கு முன்னர் அரசாங்கத்தினால் ஊரடங்குச் சட்டம் நடைமுறையில் உள்ள போது அதனை மீறி செய்பவர்களுக்கு பொலிஸ் பிணை இல்லை என்றும் அவர்களுக்கு விளக்கமறியலில் உட்பட்ட 6 மாத கால தண்டனை வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
அக்கரைபற்று பள்ளிவாசலில் இஷாதொழுகை நடத்திய 11 பேர் கைது ! Rating: 4.5 Diposkan Oleh: Dicksith

No comments: