பனங்காடு பாசுபதேசுவரர் வித்தியாலய பெயர்ப்பலகை திரைநீக்க நிகழ்வும், மரநடுகை நிகழ்வும்
சின்னப்பனங்காடு கிராம அபிவிருத்திச்சங்கத்தின் ஓரு இலட்சத்திற்கும் மேற்பட்ட நிதியீட்டத்துடன் சங்கத்தின் தலைவரும் பாடசாலை அபிவிருத்திக்குழு உறுப்பினருமான ஆர்.சுவர்ணராஜின் முழுமையான பங்களிப்புடன் பாடசாலையின்அதிபர் க.ஜயந்தன் தலைமையில் இடம்பெற்றநிகழ்வில் அக்கரைப்பற்று இராணுவ முகாமின் 241ஆம் படைப்பிரிவின் அதிகாரி மேஜர் டபிள்யுஎம்.ஏ.பி.வாசல பிரதம அதிதியாக கலந்து கொண்டதுடன் மற்றும் எச்என்பி அசுரன்ஸ் வலய முகாமையாளர் பீ.ஏ.சஜீவ் உள்ளிட்டஆசிரியர்கள் பெற்றோர்கள் மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
பொதுமக்களுக்கும் இராணுவத்தினருக்கும் இடையிலான உறவை வலுப்படுத்தும் முகமாக இராணுவத்தினர் கலந்து கொண்ட இந்நிகழ்வில் மாணவர்களின் வரவேற்பு நிகழ்வு இடம்பெற்றது. பின்னர் மேஜர் டபிள்யு எம்.ஏ.பி.வாசல உள்ளிட்ட அதிதிகள் இணைந்து பாடசாலையின் பெயர் பலகையினை திரைநீக்கம் செய்து வைத்தனர். தொடர்ந்து ஞாபகார்த்தமாக பாடசாலை வளாகத்தில் மரக்கன்றுகள் நடும் நிகழ்வும் இடம்பெற்றது. பாடசாலைகளின் அபிவிருத்தியில் மக்களின் பங்களிப்பு அவசியம் என்பதற்கு மேற்குறித்த நிகழ்வு உதாரணமாக அமைந்திருந்ததாக வருகை தந்தவர்கள் அனைவரும் பாராட்டினர்.