Monday, 23 March 2020

ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்ட நிலையில்

haran

நாட்டில் அமுல்படுத்தப்பட்ட ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்ட நிலையில் அம்பாறை மாவட்டத்தில் தம்பிலுவில் மற்றும் திருக்கோவில் பொது மக்கள்; கடைகள், தன்னியக்க இயந்திரங்கள், வங்கிகளுக்கு முண்டியடித்துக் கொண்டு செல்வதனை காண முடிகிறது.



இன்று (23) காலை தொடக்கம் குறித்த சந்திகளில் உள்ள பிரதான வீதியோரத்தில் உள்ள கடைகளிலும் பொலிஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

இது போன்று எரிபொருள் நிரப்பு நிலையங்கள்,வங்கிகளுக்கு முன்னால் நீண்ட வரிசையில் மக்கள் காத்துக் கொண்டிருப்பதனை எம்மால் அவதானிக்க முடிகிறது. ஒவ்வொரு இடங்களிலும் பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளதையும் நாட்டில் ஏற்பட்ட கொரோனாவை தடுக்க முற்காப்பு நடவடிக்கைகள் இடம் பெற்று வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது. குறித்த பொலிஸ் ஊரடங்கு சட்டம் மீண்டும் இன்று 2.00 மணியளவில் அமுல்படுத்தப்பட்டுள்ளதனால் மக்கள் முண்டியடித்துக் கொண்டு அன்றாட நடவடிக்கைகளில் ஈடுபட்டுனர்.








ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டதையடுத்து முண்டியடிக்கும் மக்கள் கூட்டம் ! Rating: 4.5 Diposkan Oleh: Dicksith

No comments: