(வி.செல்வி)
நாடளாவிய ரீதியில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை காரணமாகவும் கொரானோ தொற்று நோயை இலங்கையில் முற்றாக கட்டுப்படுத்தும் நோக்கிலும் அரசாங்கம் பல நடவடிக்கைகளை முன்னெடுத்துவருகின்றது.
இதனடிப்படையில் நாடுமுழுவதும் அரசாங்கத்தினால் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக நாளாந்த கூலியாளர்கள் தமது அன்றாட தொழிலை இழந்துள்ளனர்.
ஊரடங்கு சட்டத்தினால்அன்றாடத்தொழிளாளர்களை தலைமையாகக்கொண்ட குடும்பங்கள் அன்றாட உணவுப்பொருட்களை கொள்வனவு செய்யமுடியாது வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
இவற்றை கருத்தில் கொண்டு ஆலையடிவேம்பில் இயங்கிவரும் மனிதாபிமான செயற்பாட்டு அமைப்பான தமிழர் மேம்பாட்டு பேரவையின் ஏற்பாட்டில் வறுமைக்கோட்டிற்கு உட்பட்ட நாளாந்த கூலியாளர்களை கொண்ட எழுபத்தைந்து குடும்பங்களை இனங்கண்டு அவர்களுக்கான ஒரு நேரத்துக்கு தேவையான உலருணவுப்பொதிகள் இன்று 23.03.2020 வியாழக்கிழமை பேரவை உறுப்பினர்களால் வழங்கி வைக்கப்பட்டது.
ஆலையடிவேம்பு பிரிவுக்குட்பட்ட புளியந்தீவு,கவடாப்பிட்டி,மழ்வராயன் மாதிரிக்கிராமம்.ஆலையடிவேம்பு 8/2,09 ஆகிய பிரிவிலும் இனங்காணப்பட்டவர்களுக்கு இவ் உலருணவு பொருட்கள் வழங்கிவைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment