Monday, 30 July 2018

மாணவி சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.


மட்டக்களப்பு பகுதியில் சிறுமிகள் தங்கும் விடுதியிலிருந்து பிரத்தியேக வகுப்புக்குச் செல்வதாகக் கூறிச் சென்ற பாடசாலை மாணவி வேறு கிராமத்து வீடொன்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

Thursday, 19 July 2018

கிழக்கு மாகாண மட்ட கராத்தே சுற்றுப்போட்டிகளில் திருக்கோவில் கல்வி வலயம் 9 பதங்கங்கள் வென்று சாதனை



கிழக்கு மாகாணப் பாடசாலைகளுக்கிடையிலான மாகாண மட்ட கராத்தே சுற்றுப்போட்டிகளில் அம்பாறை மாவட்டத்தின் திருக்கோவில் கல்வி வலய மாணவர்கள் 6 தங்கம் அடங்கலாக 9 பதங்கங்களை வென்று சாதனை படைத்துள்ளனர்.

Wednesday, 18 July 2018

விசர் நாய் கடித்துக் குதறியதில் 12 பேர் வைத்தியசாலையில்


மட்டக்களப்பு - ஏறாவூர் புன்னக்குடா வீதியில் அலைந்து திரிந்த விசர் நாயொன்று தெருவில் போவோர் வருவோரைக் கடித்துக் குதறியதில் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் உட்பட 12 பேர் காயமடைந்து உடனடியாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தில் படுகாயம்


மட்டக்களப்பு – செங்கலடியில் இன்று அதிகாலை 2 மணியளவில் இடம் பெற்ற வீதி விபத்தொன்றில் இருவர் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

படகு கவிழ்ந்ததில் ஒருவர் காணாமல் போயுள்ளார்.


வாழைச்சேனை - மியன்மடு கங்கையில் படகு ஒன்று கவிழ்ந்ததில் ஒருவர் காணாமல் போயுள்ளார்.

Tuesday, 17 July 2018

பொத்துவிலில் விபச்சார சுற்றி வளைப்பு- A

பொத்துவிலில் விபச்சார விடுதி சுற்றி வளைப்பு உறுமையாளர் உட்பட இரண்டு பெண்கள் கைது பொத்துவில் பிரதான வீதி   தங்குமிட விடுதியினை நேற்று ஞாயிற்றுக் கிழமை பொலிஸார் சுற்றி வளைத்து திடீர் சோதனையிட்டனர்.

Monday, 16 July 2018

விபத்தில் பெண் உயிரிழப்பு


அம்பாறை - கொணடுவடுவான கங்கையின் அருகாமை வீதியில் பயணித்து கொண்டிருந்த பேருந்து ஒன்றின் சில்லு,திடீர் என பேருந்தில் இருந்து தனியாக கழன்று உந்துருளி ஒன்றுடன் மோதியதில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

44 வது விளையாட்டு பெருவிழா

haran
(செட்டிபாளையம் நிருபர்-க. விஜயரெத்தினம்)
கிழக்குமாகாண விளையாட்டு திணைக்களத்தின் ஏற்பாட்டில் கிழக்குமாகாண கல்வி, கலாசார,விளையாட்டு துறை அமைச்சின் அனுசரணையில் நடப்பாண்டுக்கான 44 வது விளையாட்டு பெருவிழா மட்டக்களப்பு வெபர் மைதானத்தில் நடைபெற்றது.

கிழக்கு மாகாணத்தில் 44ஆவது விளையாட்டு பெருவிழா கிழக்குமாகாண கல்வி விளையாட்டுத்துறை அமைச்சின் செயலாளர் ஐ.கே.ஜீ. முத்துபண்டா தலைமையில் இரண்டு நாட்கள் (13-14.7.2018) மட்டக்களப்பு வெபர் மைதானத்தில் 25 பெரும் விளையாட்டு நிகழ்வுகளுடன்,சுவட்டு விளையாட்டுக்களும் நடைபெற்றது.

கிழக்குமாகாணத்திற்கான விளையாட்டு பெருவிழா நிகழ்வுகளில் அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை ஆகிய மூன்று மாவட்டத்தை சேர்ந்த வீரவீரங்கனைகள் கலந்துகொண்டனர் .

இரண்டு நாட்கள் நடைபெற்ற 2018 ஆண்டுக்கான 44 வது , விளையாட்டு பெருவிழா போட்டிகளில் கலந்துகொண்ட மூன்று மாவட்டங்களில் 71 தங்க பதக்கங்களையும் , 62 வெள்ளி பதக்கங்களையும் , 39 வெண்கல பதக்கங்களையும் பெற்று முதல் இடத்தினை திருகோணமலை மாவட்டமும், 61 தங்க பதக்கங்களையும் , 60 வெள்ளி பதக்கங்களையும் 44 வெண்கல பதக்கங்களையும் பெற்று இரண்டாவது இடத்தினை அம்பாறை மாவட்டமும், 50 தங்க பதக்கங்களையும் , 37 வெள்ளி பதக்கங்களையும் , 39 வெண்கல பதக்கங்களையும் பெற்று மூன்றாவது இடத்தினை மட்டக்களப்பு மாவட்டமும் பெற்றுக்கொண்டது .71 தங்க பதக்கங்களையும் , 62 வெள்ளி பதக்கங்களையும் , 39 வெண்கல பதக்கங்களையும் பெற்று கிழக்குமாகனத்தின் 2018 ஆண்டு 44 வது விளையாட்டு பெருவிழாவில் திருகோணமலை மாவட்டம் வெற்றியாளர்களாக தெரிவு செய்யப்பட்டுள்ளனர் .

நடைபெற்ற இறுதி நிகழ்வில் பிரதம அதிதியாக மாவட்ட அரசாங்க அதிபர் எம் .உதயகுமார்,சிறப்பு அதிதிகளாக மாகாணவிளையாட்டு திணைக்கள பணிப்பாளர் என்.மதிவண்ணன், மாவட்ட விளையாட்டு துறை உத்தியோகத்தர் வி .ஈஸ்வரன் , மாநகர பிரதி முதல்வர் கே .சத்தியசீலன் ,மாநகர சபை உறுப்பினர்கள் , கிழக்குமாகான விளையாட்டு துறை திணைக்கள உத்தியோகத்தர்கள் உட்பட மூன்று மாவட்டங்களின் விளையாட்டு துறை உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டனர்.போட்டியில் கலந்து கொண்டு முதல் மூன்று இடங்களையும் பெற்றவர்களுக்கு பதக்கங்கள் அணிவித்தும், சான்றிதழ்கள்,கேடயங்கள் வழங்கப்பட்டது.











கிழக்கு மாகாணத்தின் 44ஆவது விளையாட்டு விழாவில் 172 பதக்கங்களுடன் திருகோணமலை முதலிடம் Rating: 4.5 Diposkan Oleh: Viveka Viveka

Saturday, 14 July 2018

22 ஆம் திகதி வரை திறந்திருக்கும்.



கதிர்காமம் முருகன் ஆலயத்திற்கான பாதயாத்திரையினை நாட்டின் பல பாகங்களிலும் இருந்தும் மேற்கொண்டுவருகின்றனர். கதிர்காமம் கொடியேற்றம் 13 ஆம் திகதி வெள்ளிக்கிழமையுடன் ஆரம்பமாகியது.
இந்நிலையில் உகந்தை மலை முருகன் ஆலயத்திலிருந்து காட்டுப்பாதை ஊடாக பக்தர்கள் பாதயாத்திரையில் ஈடுபட்டுவருகின்றனர். கதிர்காமத்திற்கான காட்டுப்பாதை கடந்த 4 ஆம் திகதி உத்தியோக பூர்வமாக திறந்துவைக்கப்பட்டது. இப்பாதை எதிர்வரும் 22 ஆம் திகதி வரை திறந்திருக்கும்.

நீரில் மூழ்கி உயிரிழப்பு



அம்பாறை, பொத்துவில், சர்வோதய புர கொடாவவ குளத்தில் நீராடச் சென்ற 16 வயதுச் சிறுவன் ஒருவன், இன்று (14) நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொத்துவில் பொலிஸார் தெரிவித்தனர்.


Thursday, 12 July 2018

கதிர்காம ஆடிவேல் இன்று (13) கொடியேற்றம்

haran
 கதிர்காம ஆடிவேல் இன்று (13) கொடியேற்றம்



இலங்கையின் தென் பகுதியான மொனராகலை  மாவட்டத்தின் தென் எல்லையில் கதிர்காம திருத்தலம் அமைந்துள்ளது .மூவின மக்களும் பக்தியுடன் தரிசிக்கும் புனித பூமியான கதிர்காமக் கந்தனின் வருடாந்த ஆடிவேல்  உற்சவம் இன்று 13ம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி 27ம் திகதி தீர்த்தோற்சவத்துடன் நிறைவடையவுள்ளது.

Wednesday, 11 July 2018

ஆற்றல் கல்விக் கண்காட்சி


(அரசூர் மாறன்)

சிவாநந்தா தேசிய பாடசாலையின் ஆரம்பப் பிரிவும் சிவாநந்தா பழைய மாணவர் சங்கமும் இணைந்து ஏற்பாடு செய்த ஆற்றல் கல்விக் கண்காட்சி

பாலியல் துஷ்பிரயோகம் 17 ஆம் திகதி வரை விளக்கமறியல்


மட்டக்களப்பு வெல்லாவெளி பிரதேசத்தில் தந்தை மற்றும் தாய் இணைந்து அவர்களது 11 வயது மகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட நிலையில் அவர்களை எதிர்வரும் 17 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு களுவாஞ்சிக்குடி நீதிமன்ற நீதிபதி நேற்று உத்தரவிட்டுள்ளார்.

ஆசியாவில் 8ஆவது இடம் அம்பாறை – அறுகம்குடாவிற்கு


ஆசியாவில் 8ஆவது இடம் அம்பாறை – அறுகம்குடாவிற்கு 


ஆசியாவில் மிகச் சிறந்த 10 சுற்றுலாத்தளங்களில், அம்பாறை – அறுகம்குடா, 8ஆவது இடத்தைப் பிடித்துள்ளது.

Monday, 9 July 2018

நாம் இணைந்து செய்வோம் வாருங்கள்...

பாராட்டுவோம் நீங்களும் விண்ணப்பியுங்கள் 
 panankadu.com

எமது அன்பு உறவுகளே நீங்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு 
வகையில் சிறந்தவர்கள் சாதனை சிப்பிகள்..... ....


துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்துள்ளார்.

கிருஷ்ணபிள்ளை கிருபாநந்தன் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்துள்ளார்.


காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளுக்காக வீதியில் தவிக்கும் மக்களின் விடிவுக்காக அண்மைக்காலமாக போராடிவந்த

Sunday, 8 July 2018

நால்வரையும் தேடும் பணி


அம்பாறை – தமன, எக்கல்ஓயாவிற்கு சென்ற நால்வர் நீரில் மூழ்கி காணாமற்போயுள்ளனர். இவர்களை தேடும் பணிகள் தற்போது தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

Friday, 6 July 2018

ஒருவர் குமுக்கனில் மரணமாகியுள்ளார்.


கதிர்காமப் பாதயாத்திரையில் சென்ற பாதயாத்திரிகர் ஒருவர் குமுக்கனில் மரணமாகியுள்ளார்.

இவர் காரைதீவைச் சேர்ந்த எஸ்.விஜயசிங்கம் (வயது70) என அடையாளம் காணப்பட்டுள்ளார். இவரை சின்னவன் மேசிலார் என அழைப்பதுண்டு.

Wednesday, 4 July 2018

ரோந்து நடவடிக்கையில் ஈடுபட ,கோரிக்கை


(ரவிப்பரியா)


பெரியகல்லாறு - 01 மகாவித்தியாலய வீதியில் ம.கிருபைராஜா என்பவரின் இல்லத்தில்  இன்று புதன்(04) அதிகாலை 2.30 மணியளவில் அவரது மனைவியின் 15பவுண் தங்ககொடி கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக களுவாஞ்சிக்குடி பொலிசில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. குற்றப் புலனாய்வுப் பிரிவு பொறுப்பதிகாரி தலைமையிலான குழுவினர் ஸ்தலத்திற்கு விஜயம் செய்து விசாரணைகளை முடுக்கிவிட்டுள்ளனர்.

கொள்ளை



களுவாஞ்சிக்குடி பிரதேசத்தில் இடம்பெற்ற கொள்ளைச் சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் மூன்று பேரை கைதுசெய்துள்ளதாக களுவாஞ்சிக்குடி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஆலயவிக்கிரகங்கள் எரித்து சேதமாக்கப்பட்டுள்ள சம்பவம்

(க. விஜயரெத்தினம்) திருகோணமலை மாவட்டத்தின் வெருகல் பிரதேச செயலாளர்பிரிவில் உள்ள முட்டுச்சேனை குளக்கட்டில் அமைந்துள்ள குளக்கட்டு அம்மன் என அழைக்கப்படும் ஆலயவிக்கிரகங்கள் எரித்து சேதமாக்கப்பட்டுள்ள சம்பவம் நேற்று இரவு (3.7.2018) நடைபெற்றுள்ளது.

Tuesday, 3 July 2018

நிதி உதவி



சுவிஸ் உதயம் அமைப்பின் ஏற்பாட்டில் ஆரையம்பதி கோயில் குளத்தினைச் சேர்ந்த பல்கலைக்கழக மாணவியின் கல்வி நடவடிக்கைக்கு  நிதி உதவி வழங்கி வைக்கும் நிகழ்வு திங்கட்கிழமை மாலை இடம்பெற்றது.

காட்டுப்பாதை மூடப்படும் திகதி மாற்றம்



வரலாற்றுப்பிரசித்திபெற்ற கதிர்காம ஆடிவேல்விழாவிற்குச் செல்லும்
பாதயாத்திரீகர்களுக்கான காட்டுப்பாதை திறந்து மூடும் திகதியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அம்பாறைமாவட்ட  மேலதிக அரசாங்க அதிபர் கே.விமலநாதன் தெரிவித்தார்.

Monday, 2 July 2018

தமிழீழ விடுதலை புலிகள் காலத்தில் எப்படி வாழ்ந்தோம்... சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன்


இன்றைய சூழலில் தமிழீழ விடுதலை புலிகளை உருவாக்கவேண்டும் என்பதே எங்களுடைய முக்கிய நோக்கம் என இலங்கையின் சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

சமூகத்திற்கான நீண்டகால முதலீடாகும்.



நாட்டில் நிலவிய போர்ச்சூழல் காரணமாக பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்கள் அபயம் தேடி மேலைத்தேய நாடுகளுக்குப் புலம் பெயர்ந்து சென்றனர். இவர்கள் தமது உறவுகளைப் பிரிந்தும் கொட்டும் பனியில் அல்லல்பட்டு உழைத்த பணத்தில் ஒரு பகுதியை போரினால் பாதிக்கப்பட்ட தமது உறவுகளுக்கு வழங்க மறக்கவில்லை. இத்தகைய உதவிகளில் ஒன்றையே சம்மாந்துறை மண்ணில் பிறந்து லண்டனில் தற்சமயம் வாழும் வேலாயுதப்பிள்ளை இந்திரன் மேற்கொண்டுள்ளார். இவரின் கல்விக்கான உதவி எமது சமூகத்திற்கான நீண்டகால முதலீடாகும்.

சில ஆடைகள் வனப்பகுதியொன்றில் இருந்து மீட்கப்பட்டுள்ளன

யாழ்ப்பாணம் - சுழிபுரம் பிரதேசத்தில் படுகொலை செய்யப்பட்ட சிறுமி றெஜினா அணிந்திருந்ததாக சந்தேகிக்கப்படும் சில ஆடைகள் வனப்பகுதியொன்றில் இருந்து மீட்கப்பட்டுள்ளன.

Sunday, 1 July 2018

வண்மையாக கண்டிக்கின் றோம்

வண்மையாக கண்டிக்கின்றோம்,  த.தே.கூ பிரதேச சபை  உறுப்பினர்  த. சுபோகரன் 



பொத்துவில் பிரதேச சபை உறுப்பினர்  தாயுதீன் அட்டாகாசத்தினை நாங்கள் வண்மையாக கண்டிக்கின் றோம் பொத்துவில் பிரதேச சபையில் உறுப்பினர் ஒருவரது செயற்பாட்டினால் தமிழர்கள் நம்பிக்கையிழந்து வருகின்றனர் என  பிரதேச சபை  உறுப்பினர்   சுபோகரன் தெரிவித்தார்