அமைச்சர் டி.எம்.சுவாமிநாதனின் வழிகாட்டலில் கடந்தகால உள்நாட்டுப் போரினால் பாதிக்கப்பட்ட வடக்கு-கிழக்கு மாகாண மக்களுக்காக சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, மீள்குடியேற்றம், புனர்நிர்மாணம் மற்றும் இந்துமத அலுவல்கள் அமைச்சினால் நடைமுறைபடுத்தப்பட்டுவரும் 65,000 வீட்டுத்திட்டத்தின் கீழ் ஆலையடிவேம்பு பிரதேசத்தில் கட்டி
முடிக்கப்பட்டுள்ள புதிய வீடொன்றைக் கையளிக்கும் நிகழ்வு இன்று (01) காலை அக்கரைப்பற்று
– 9 கிராம சேவகர் பிரிவில் இடம்பெற்றது.
குறித்த
கிராம சேவகர் பிரிவுக்கான பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் வை.இதயதினேஸினால்
ஒழுங்கு செய்யப்பட்டிருந்த அந்நிகழ்வில் உப்புக் கரைச்சி பகுதியில் சுமார் 0.8
மில்லியன் ரூபாய்கள் செலவில் நிர்மாணிக்கப்பட்டிருந்த பிரஸ்தாப வீட்டை ஆலையடிவேம்பு பிரதேச
செயலாளர் வி.ஜெகதீஸன் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு நாடாவை வெட்டி உரிய பயனாளியிடம்
உத்தியோகபூர்வமாகக் கையளித்தார்.
இவ்வைபவத்தில்
பிரதேச செயலாளருடன் ஆலையடிவேம்பு பிரதேச திட்டமிடல் பிரதி பணிப்பாளர் கே.பாக்கியராஜா, தொழிநுட்ப
உத்தியோகத்தர் ஏ.அஜீர் ஆகியோருடன் பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்களும் கலந்துகொண்டிருந்தனர்.
No comments:
Post a Comment