Monday, 13 November 2017

கிழக்கின் இந்து எழுச்சி விழா



haran
(எஸ்.நவா)

நேற்று  12.11.2017 ஞாயிற்றுக்கிழமை மு.ப 9.00 மணியளவில் வெல்லாவெளி போரதீவுப்பற்று கலாச்சார மத்திய நிலையத்தில்;   உள்ளக அலுவல்கள் வடமேல் அபிவிருத்தி மற்றும் கலாச்சார அலுவல்கள் அமைச்சின் Nick & Nily Foundation  நிதியுதவியுடன் நடாத்தப்பட்ட கிழக்கின் இந்து எழுச்சி விழாவானது   கிழக்கிலங்கை இந்துசமய சமூக அபிவிருத்தி சபையின்;   தலைவர் த.துஷ்யந்தன் அவர்களின் தலைமையில் மிகவும் சிறப்பான முறையில் இடம்பெற்றிருந்தது.


அதிதிகளை மலர்மாலை அணிவித்து மங்கள விளக்கேற்றலுடன் நிகழ்வுகள் ஆரம்பிக்கப்பட்டது இதன்போது சபையினால் கடந்தகாலங்களில் மேற்கொள்ளப்பட்ட திட்டங்களும் நிகழ்வுகளுக்குமான ஓர் பார்வையும் மற்றும் கலைகலாச்சார பாரம்பரிய நிகழ்வுகள் ஒய்வு பெற்றுச் சென்ற  போரதீவுப்பற்று கோட்டக்கல்வி அதிகாரி பூ.பாலச்சந்திரன் அவர்களை கௌரவித்தல் அதேபோன்று 2017ம் புலமை பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்கள் கற்பித்த ஆசிரியர்கள் அதிபர்கள் ஊக்குவித்த பெற்றோர்கள் அனைவரையும் பாராட்டி கௌரவித்தல்  போரதீவுப்பற்று அறநெறிப் பாடசாலைகளுக்கான 'கூட்டு பஜனைப் பாடல்' போட்டிகளில் வெற்றிபெற்ற அறநெறி பாடசாலை மாணவர்களுக்கு சான்றிதழ்களும் வழங்குதல்; மற்றும் வலது குறைந்தவருக்கு சக்கர நாற்காலி வழங்கும் நிகழ்வும் இடம்பெற்றிருந்தது

இந் நிகழ்வின்போது அதிதிகளாக கிழக்கு பல்கலைக்கழக விரிவுரையாளர்  சோ.ஜெகநாதன் தேசிய கொள்கை திட்டமிடல் மற்றும் மனிதவள அபிவிருத்தி சபையின்  உதவிப்பணிப்பாளர் எஸ்.தனிகசீலன் முன்னாள் மாகாணசபை உறுப்பினர் ஞா. கிருஸ்ணபிள்ளை மற்றும் அதிபர்கள் ஆசிரியர்கள் அறநெறி பாடசாலையின் ஆசிரியர்கள் மாணவர்கள் நலன் விரும்பிகள் அனைவரும் இன் நிகழ்வின் போது கலந்துகொண்டது சிறப்பம்சமாகும்.

















No comments: