Sunday, 5 November 2017

படுகொலை அஞ்சலி


( -க.விஜயரெத்தினம்)
களுவாஞ்சிகுடியில் இந்திய இரானுவத்தினால் படுகொலை செய்யப்பட்டவர்களின் நினைவாக அஞ்சலி செலுத்துதலும்,நினைவுத்தூபி திறப்புவிழாவும் (5.11.2017) ஞாயிற்றுக்கிழமை காலை 11.00 மணியளவில் களுவாஞ்சிகுடி கிராமத்தலைவர் கே.கந்தவேள் தலைமையில் இராசமாணிக்கம் மண்டபத்தில் நடைபெற்றது. களுவாஞ்சிகுடி கிராமத்தைச்  11 இளைஞர்கள் 1987.10.23 திகதியன்று இந்திய இரானுவத்தினால் பிடிக்கப்பட்டு, துன்புறுத்தப்பட்டு சுட்டுக்கொலை செய்யப்பட்ட நாளை முன்னிட்டு இந்த நினைவுதினம்  அனுஸ்டிக்கப்பட்டது.

இந்த நினைவுநாளை நினைவு கூர்ந்து இராசமாணிக்கம் மக்கள் அமைப்பினாலும்,களுவாஞ்சிகுடி ஆலயங்களின் முகாமைத்துவசபையினால் ஒழுங்கு செய்யப்பட்டதாகும்.இந்த நினைவுதினத்தில் களுவாஞ்சிகுடி மாணிக்கப்பிள்ளையார் ஆலயத்தில் படுகொலை செய்யப்பட்டு உயிர்நீத்த குடும்பங்களின் உறவுகள்,பொதுமக்கள் கலந்துகொண்டு  ஆத்ம ஈடேற்றத்திற்காக பிள்ளையார் ஆலயத்தில் விஷேட பூசை வழிபாடுகள் இடம்பெற்றது.

அதன்பின்பு உயிர்நீத்த உறவுகளின் ஞாபகார்த்தமாக கட்டப்பட்ட நினைவுத்தூபியில் மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது.11பேருக்கும் உறவினர்களால் சுடரேற்றி வைக்கப்பட்டது.இந்நிகழ்வில் களுவாஞ்சிகுடி ஆதாரவைத்தியசாலையின் பணிப்பாளர் குணசிங்கம்-சுகுணன்,பிரபல வர்த்தகர் கே.ரஞ்சிதமூர்த்தி,ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சின் பட்டிருப்பு தொகுதி அமைப்பாளரும்,இராசமாணிக்கம் மக்கள் அமைப்பின் தலைவருமான இராஜபுத்திரன்-சாணாக்கியன்,குருமண்வெளி சிவசக்தி வித்தியாலய அதிபர் கே.சத்தியமோகன் ,கிராம அபிவிருத்தி சங்க தலைவர் என்.பவளேந்திரன்,இராசமாணிக்கம் மக்கள் அமைப்பின் பிரதிகள்,ஊடகவியலாளர்கள், உட்பட நூற்றுக்கான பொதுமக்கள் கலந்துகொண்டார்கள்.





களுவாஞ்சிகுடியில் இந்திய இரானுவத்தினால் படுகொலைச்செய்யப்பட்டவர்களின் 30ஆவது ஆண்டு நினைவுதினம் அனுஸ்ட்டிப்பு. Rating: 4.5 Diposkan Oleh: Nadanasabesan samithamby

No comments: