Saturday, 4 November 2017

10 ம் ஆண்டு நினைவேந்தல்


(க.சரவணன்)

முன்னாள் தமிழீழ விடுதலை புலிகளின் அரசியல் பொறுப்பாளர் சு.ப.தமிழ்செல்வனின் 10 ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு தமிழ் தேசிய மக்கள் முன்னனி மட்டக்களப்பு தாமரைக்கேணி காரியாலயத்தில் நேற்று  வியாழக்கிழமை நடைபெற்றது.


இவ் நிகழ்வில் கட்சி மாவட்ட இணைப்பாளர் தர்மலிங்கம் சுரேஷ்  மற்றும் ஆதரவாளர்கள் பொதுமக்கள் பலர் பலந்துகொண்டு அரசியல் பொறுப்பாளர் சு.ப.தமிழ்செல்வனின் உருவப்படத்திற்கு சுடர்ஏற்றி மலர்மாலை அணிந்து மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.



கடந்த 2007ம் ஆண்டு கிளிநொச்சியில் விடுதலைப் புலிகளின் சமாதான செயலகம் மீது இடம்பெற்ற விமான குண்டுதாக்குதலில் அரசியல் பொறுப்பாளர் சு.ப.தமிழ்செல்வன் உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.









haran

No comments: