கஞ்சிகுடிச்சாறு, தங்கவேலாயுதபுரம் மக்களுக்கு நீர் பம்பிகள் அன்பளிப்பு.
கிழக்கு மாகாண சபையின் தமிழ் தேசிய கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட உறுப்பினர்களான மு.இராஜேஸ்வரன் மற்றும் த.கலையரசன் ஆகியோரின் வேண்டுகோளின் பிரகாரம் கிழக்கு மாகாண விவசாய, கால்நடை அமைச்சினால் 25 நீர் பம்பிகள் தங்கவேலாயுதபுரம் மக்களுக்கு வழங்கி வைக்கப்பட்டது.
இந் நிகழ்வில் மாகாண விவசாய,கால்நடை மற்றும் மீன்பிடி அமைச்சரான நஸீர் அஹமட், அமைச்சின் செயலாளர் பத்மநாதன், மாகாண சபை உறுப்பினர்களான மு.இராஜேஸ்வரன் மற்றும் த.கலையரசன் மற்றும் திருக்கோவில் பிரதேச செயலாளர் கோபாலரத்தினம், பணிப்பாளர்கள், அபிவிருத்தி உத்தியோகஸ்தர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
அத்துடன் கஞ்சிகுடிச்சாறு, தங்கவேலாயுதபுரம், தாமரை குளம் ஆகிய பிரதேசங்களுக்கு மின்சார வசதியினை பெற்று தருமாறும் மாகாண சபை உறுப்பினர்கள் அமைச்சரிடம் கேட்டுக்கொண்டனர்.
அண்மையில் யானையின் தாக்குதலில் 4 பேர் கொல்லப்பட்டதுடன், இப் பிரதேசத்தில் மின்சாரம், குடிநீர், போக்குவரத்து, தொலை தொடர், வைத்தியசாலை, பாடசாலை போன்ற அடிப்படை வசதிகள் அற்ற நிலையிலேயே இம்மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.
இப்பிரதேசங்கள் யுத்தத்தினால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட பிரதேசமாகும். யுத்த காலத்தின் போது இப்பிரதேசம் விடுதலை புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்தமை குறிப்பிட தக்கது.

No comments:
Post a Comment