Friday, 2 August 2013

மகாசக்தி முன்பள்ளி சிறார்களின் ஆக்கத்திறன் கண்காட்சி – 2013


(எஸ்.ஜே.பிரேம் ஆனந்த்)
அக்கரைப்பற்று மகாசக்தி நிருவனத்தினால் நடாத்தப்பட்டுவரும் முன்பள்ளிகளில் பயிலும் சிறுவர்களின் ஆக்கத்திறனை வெளிக்காட்டும் இரண்டுநாள் கண்காட்சியொன்று 02.08.2013 தொடக்கம் 03.08.2013 வரை அந்நிறுவனத்தின் சாகாமம் வீதியிலுள்ள கூட்டுறவு மண்டபத்தில் நடைபெறுகிறது.


இக்கண்காட்சி 02.08.2013 வெள்ளிக்கிழமை காலை 9.30 மணிக்கு பிரதம அதிதியாகக் கலந்துகொண்ட ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் திரு.வே.ஜெகதீசன் அவர்களால் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.

மகாசக்தி நிறுவனத் தலைவர் திரு.க.சோமசுந்தரம் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் விசேட அதிதிகளாக ஆலையடிவேம்பு கோட்டக்கல்வி அதிகாரி திரு.வி.குணாளன் மற்றும் முன்பள்ளி பாதுகாப்பு அபிவிருத்தி இணைப்பாளர் திரு.எஸ்.தர்மபாலன் ஆகியோரும் முன்பள்ளிச் சிறார்கள் மற்றும் பெற்றோர்களும் கலந்துகொண்டனர்.









No comments: