(எஸ்.ஜே.பிரேம் ஆனந்த்)
'தயட்ட கிருள' அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் கீழ் சாகாம வீதியின் கூளாவடிச் சந்தியிலிருந்து சாந்திபுரம் செல்லும் பாதையினை அப்பிரதேசத்தைச் சேர்ந்த பொதுமக்கள் மற்றும் விவசாயிகளின் தேவை கருதி 1.5 மில்லியன் ரூபாய் செலவில் சுமார் 800 மீட்டர் நீளத்திற்கு செப்பனிடவும் புதிய வடிகான் அமைப்பதற்குமான அடிக்கல் நடும் வைபவம் 26.08.2013, திங்கட்கிழமை நடைபெற்றது.
இந்நிகழ்வுக்கு அதிதிகளாக திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பி.எச்.பியசேன, ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் வீ.ஜெகதீசன், நீத்தை பிரதேச இராணுவ கமாண்டர் கேணல்.நெவில் பெரேரா, அக்கரைப்பற்று பிரதேசப் பண்ணை அமைப்புக்களின் தலைவர் ஏ.அஹமட் மொஹிடீன், தொழில்நுடப உத்தியோகத்தர் ஆர்.ரதன், கிராம சேவை உத்தியோகத்தர் கே.லோகநாதன் ஆகியோரும் பொதுமக்களும் கலந்துகொண்டனர்.
No comments:
Post a Comment