ஆலையடிவேம்பு பிரதேச
செயலகத்தில் பணியாற்றும் முஸ்லிம் உத்தியோகத்தர்களால் வருடாந்தம் நடாத்தப்பட்டுவரும்
நோன்புப் பெருநாள் சிறப்பு நிகழ்ச்சி இம்முறை 14.08.2013, புதன்கிழமை காலை 11.00
மணிக்கு, ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தின் நவரெட்ணராஜா கலையரங்கில்
நடாத்தப்பட்டது.
நிருவாக
உத்தியோகத்தர் K.L.A.M.ரஹ்மத்துல்லா அவர்களின் தலைமையில் நடைபெற்ற
இந்நிகழ்ச்சிக்கு, பிரதம அதிதியாக ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் V.ஜெகதீசன்
அவர்கள் கலந்து கொண்டதுடன் உதவித் திட்டமிடல் பணிப்பாளர் திருமதி. திலகராணி கிருபைராஜா,
கிராமசேவை உத்தியோகத்தர்களுக்கான நிருவாக உத்தியோகத்தர் E.குலசேகரன், இவர்களுடன் சமுர்த்தி
உத்தியோகத்தர்கள், கிராமசேவை உத்தியோகத்தர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் பட்டதாரிப்
பயிலுனர்கள் அனைவரும் கலந்து சிறப்பித்தனர்.
பிரதம முகாமைத்துவ
உதவியாளர் A.L.M.பசீல் அவர்களால் தொகுத்து வழங்கப்பட்ட இந்நிகழ்வில் “ரமழானின்
பெருமை” என்ற தலைப்பில் அபிவிருத்தி இணைப்பு உத்தியோகத்தர் S.L.M.அன்வர் அவர்களால்
சிறப்புரை வழங்கப்பட்டது. கலை நிகழ்வுகளாக முகாமைத்துவ உதவியாளர் திருமதி.A.H.நூறுல்
ஹினாயா அவர்களால் புனித ரமழான் சிறப்புக் கவிதை வாசிக்கப்பட்டதுடன் முகாமைத்துவ
உதவியாளர் V.சுகிர்தராஜா, பட்டதாரிப் பயிலுனர் R.சிவானந்தம் ஆகியோர் பாடல்களையும்
வழங்கினர். இவற்றுடன் பட்டதாரிப் பயிலுனர் S.J.பிரேம் ஆனந்த் அவர்களின் நகைச்சுவை நிகழ்ச்சியும்
இடம்பெற்றது.
இந்நிகழ்வில் ஆலையடிவேம்பு
பிரதேச செயலாளர், உதவித் திட்டமிடல் பணிப்பாளர் மற்றும் கிராமசேவை உத்தியோகத்தர்களுக்கான
நிருவாக உத்தியோகத்தர் ஆகியோரின் உரைகளும் இடம்பெற்றன.
நிகழ்வின் இறுதியில்
நன்றி உரையினை பிரதம முகாமைத்துவ உதவியாளர் A.L.M.பசீல் அவர்கள் வழங்கினார்.
No comments:
Post a Comment