Thursday, 23 January 2020

பாரிய மரம் வீழ்ந்துள்ளது.


(வி.சுகிர்தகுமார்)
அம்பாரை மாவட்டத்தின் அக்கரைப்பற்று பிரதேசத்தில் இன்று(23) அதிகாலை வீசிய பலத்த காற்று காரணமாக அக்கரைப்பற்று சாகாமம் பிரதான வீதியின் அர்ச்சனா திரையரங்கிற்கு முன்பாக வீதி அருகில் இருந்த பாரிய மரம் வீழ்ந்துள்ளது.



பிரதான வீதியின் குறுக்கே மரம் சாய்ந்து வீழ்ந்ததனால் சில மின் இணைப்புக்களும் துண்டிக்கப்பட்ட நிலையில் பல மணி நேரம் போக்குவரத்து தடைப்பட்டது.

இதனால் பொதுமக்களும் வாகன சாரதிகளும் பலத்த அசௌகரியங்களை எதிர்கொண்டனர்.

அக்கரைப்பற்று ஆலையடிவேம்பு பிரதேசங்களில் இன்று அதிகாலை பலத்த இடியுடன் கூடிய மழை பெய்ததுடன் பலத்த காற்றும் வீசியது.
இதனால் பொதுமக்கள் அச்சம் அடைந்ததுடன் வெளியில் செல்லாமல் வீடுகளுக்குள் முடங்கி இருந்தனர்.

இந்நிலையிலேயே குறித்த மரம் சாய்ந்து வீழ்ந்ததுடன் மரம் வீழ்ந்தபோது அதிஸ்டவசமாக பொதுமக்களோ வாகனங்களோ அவ்வீதியில் செல்லவில்லை. இதனால் பாரிய சேதங்கள் தவிர்க்கப்பட்டுள்ளதாக நேரில் கண்டவர்கள் தெரிவித்தனர்.

இதேநேரம் குறித்த சம்பவம் தொடர்பில் ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் கே.லவநாதனின் மற்றும் பிரதேச சபை தவிசாளரின் கவனத்திற்கு கொண்டு சென்ற நிலையில் மரத்தை அகற்றும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.




5
அக்கரைப்பற்று சாகாமம் பிரதான வீதியில் பலத்த காற்று காரணமாக பாரிய மரம் வீழ்ந்துள்ளது! Rating: 4.5 Diposkan Oleh: Office

No comments: