இந்த வருடத்துக்கான முதலாவது சந்திர கிரகணம் இன்று(வெள்ளிக்கிழமை) திகதி நிகழவுள்ளது.
ஓநாய் சந்திர கிரகணம் என நாசாவினால் பெயரிடப்பட்டுள்ள இந்த சந்திர கிரகணம் பகுதியளவிலேயே தென்படும் என தெரிவிக்கப்படுகிறது.
இன்று இரவு 10.38 முதல் 11ஆம் திகதி அதிகாலை 2.42 வரை சந்திர கிரகணம் நிகழவுள்ளது.
இதேவேளை, இந்த வருடம் ஜுன் 5, ஜுலை 5 மற்றும் நவம்பர் 30 ஆகிய திகதிகளில் சந்திர கிரகணங்கள் நிகழவுள்ளன.
அத்துடன், 4 சூரிய கிரகணங்கள், 1 வளைய சூரிய கிரகணம் மற்றும் 1 பூரண சூரிய கிரகணம் ஆகியவையும் இந்த வருடம் நிகழவுள்ளமை குறிப்பிடத்தக்கது
No comments:
Post a Comment