Sunday, 19 January 2020

விளைச்சலில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள பண்டி


(அஸ்ஹர் இப்றாஹிம் )
அம்பாறை மாவட்டத்தில் சிறுபோக வேளாண்மை செய்கையில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் கிலுகிலுப்பான் எனும் ஒருவகை பண்டிச் சம்பா நெல் இனம் ,பயிரிடப்பட்டுள்ள பிரதான நெல் பயிருடன் போட்டியிட்டு வளர்ந்து விளைச்சலில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.


.நெல் விதைக்கப்பட்ட தினத்திலிருந்து இந்த பண்டி சம்பா நெல் இனம் முளைக்க ஆரம்பித்து பிரதான நெல் பயிர் கதிர் விடுவதற்கு முன் இந்த போட்டிப்பயிர் கதிர் பறிய ஆரம்பிப்பதுடன் வயல் நிலத்தில் அதன் விதைகளை கொட்டியும் விடுகின்றன.

போட்டி நெல் இனம் ஆரம்பத்திலிருந்தே தனது இலையை பிரதான பயிர் வளரவிடாமல் தடுத்து வைத்துக் கொள்கின்றது.கிலுகிலுப்பான் வயல் நிலத்தையும், பிரதான பயிரையும் அதன் விளைச்சலையும் பாதித்து விடும் என்ற காரணத்தால் கூலியாட்களைக் கொண்டு பல ஆயிரக்கணக்கான பணத்தை செலவிட்டு ஆரம்பத்தில் இவை வேருடன் பிடுங்கப்பட்டு , பிரதான பயிரை மூடிக்காணப்பட்ட கிலுகிலுப்பானின் தோகை ( இலை ) அறுக்கப்பட்டு பின்னர் அவற்றின் கதிர்கள் அறுக்கப்பட்டன.

நிந்தவூர் விவசாய விரிவாக்கல் பிரிவு மற்றும் சம்மாந்துறை விவசாய விரிவாக்கல் பிரிவுகளைச் சேர்ந்த சுமார் 250 ஏக்கருக்கும் மேற்பட்ட வயல்கள் இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாய விரிவாக்கல் உத்தியோஸ்தர் தெரிவித்தார்.

தற்போது அம்பாறை மாவட்டத்தில் பரவலாக சிறுபோக நெல் அறுவடை இடம்பெற்ற போதிலும் கிலுகிலுப்பான் நெற்பயிர் தாக்கியிருந்த வயல் நிலங்களில் விளைச்சல் 50 வீதமாக காணப்படுவதாகவும் அவ்வாறாக அறுவடை செய்யப்படும் நெல்லை அரிசி ஆலை உரிமையாளர்கள் குறைந்த விலைக்கு கொள்வனவு செய்வதாலும் நமக்கு பெருமளவு நஸ்டம் ஏற்பட்டுள்ளதாகவும் விவசாயிகள்மேலும் கவலை தெரிவிக்கின்றனர்.



அம்பாறை மாவட்டத்தில் சிறுபோக வேளாண்மை செய்கையில் பண்டிச் சம்பா நெல் வளர்ந்து பாரிய தாக்கம்!- விவசாயிகள் கவலை Rating: 4.5 Diposkan Oleh: Office

No comments: