Tuesday, 28 January 2020

12 வைத்தியசாலைகள் தயார் நிலையில்

haran



கொரோனா வைரஸ் தொடர்பில் முகம்கொடுக்கு அனைத்து மாகாணங்களும் உள்ளடங்கியதாக, 12 வைத்தியசாலைகள் தயார் நிலையில் உள்ளதாக, சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அதற்கமைய, தேசிய தொற்றுநோய் வைத்தியசாலை (IDH), கொழும்பு வடக்கு, கம்பஹா, இரத்தினபுரி, பதுளை, கராபிட்டி உள்ளிட்ட 12 மருத்துவமனைகள் இதற்கான தயார்படுத்தப்பட்டுள்ளதாக, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டாக்டர் அனில் ஜாசிங்க தெரிவித்தார்.

இதேவேளை, கொரோனா வைரஸ் தொற்றுநோயை எவ்வாறு தடுப்பது என்பது குறித்து பாடசாலைகளுக்கு தெளிவுபடுத்தும் வகையிலான, துண்டுப்பிரசுரத்தை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு, கல்வியமைச்சினால் சுகாதார அமைச்சிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

No comments: