படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் கணபதிப்பிள்ளை தேவராசாவின் நினைவேந்தல்
படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் கணபதிப்பிள்ளை தேவராசாவின் நினைவேந்தல் நிகழ்வு இன்று (25) புதன்கிழமை ஆலையடிவேம்பு கலாசார மண்டபத்தில் நடைபெற்றது.
அம்பாரை மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியமும் கிழக்கு மாகாண ஊடகவியலாளர் ஒன்றியமும் இணைந்து நடாத்திய மறைந்த ஊடகவியலாளரின் 34 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வின்போது படுகொலை செய்யப்பட்ட வீரகேசரி ஊடகவியலாளர் க.தேவராசா அவர்களின் குடும்ப உறவினர்களும், மட்டக்களப்பு அம்பாரை மாவட்ட ஊடகவியலாளர்கள் மற்றும் அம்பாரை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் உள்ளிட்டோர் ஈகைச்சுடர் ஏற்றி மலரஞ்சலி செலுத்துவதனையும் படங்களில் காணலாம்.