(வி.சுகிர்தகுமார்)
அம்பாரை மாவட்டத்தில் பல பிரதேசங்களில் மீண்டும் மழை பெய்ய ஆரம்பித்துள்ளது.ஆலையடிவேம்பு பிரதேசத்தில் இன்று காலை முதல் அடிக்கடி பலத்த மழை பெய்து வருவதுடன் இடைக்கிடையே பலத்த காற்றும் வீசி வருகின்றது.
கடந்த சில வாரங்களாக அம்பாரை மாவட்டத்தில் மழையின் காரணமாக வெள்ள அனர்த்தம் ஏற்பட்டு சில தினங்களுக்கு முன்னர் சுமூகமான நிலை ஏற்பட்டு மக்கள் இயல்பு வாழ்க்கை நிலைக்கு திரும்பி வந்துகொண்டிருந்தனர்.
இச்சந்தர்ப்பத்திலேயே இன்று மீண்டும் மழை பெய்ய தொடங்கியுள்ளது.
இதனால் பொதுமக்கள் மீண்டும் அசௌகரியங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.
இதேநேரம் ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்திற்குட்பட்ட சில வீதிகளிலும் வெள்ளம் தேங்கியுள்ளதை காண முடிந்தது. இந்நிலையில் ஆலையடிவேம்பில் டெங்கு நோயின் தாக்கம் அதிகரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.