Monday, 30 December 2019

சட்டவிரோதமாக மண் அகழ்ந்


(பாறுக் ஷிஹான்)
டிப்பர் வாகனத்தின் மூலம் சட்டவிரோதமாக மண் அகழ்ந்த குற்றச்சாட்டில் இருவரை சவளைக்கடை பொலிஸார் கைது செய்துள்ளனர்.


ஞாயிற்றுக்கிழமை (29) நள்ளிரவு சவளைக்கடை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வீரச்சோலை வழுக்கமடு பகுதியில் சந்தேகத்திற்கிடமான நபர்களின் நடமாட்டம் தொடர்பில் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற புலனாய்வு நடவடிக்கையில் இச்சந்தேக நபர்கள் கைதாகினர்.

இதன் போது கைதான சந்தேக நபர்களை கல்முனை நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

அண்மைக்காலமாக இப்பகுதியில் சட்டவிரோதமாக மண் அகழ்வு நடவடிக்கை இடம்பெற்றுவருவதாக குற்றச்சாட்டும் முன்வைக்கப்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.




வீரச்சோலை வழுக்கமடுவில் மண் அகழ்ந்தவர்கள் கைது- டிப்பர் வாகனமும் மீட்பு Rating: 4.5 Diposkan Oleh: Office

No comments: