haran
அம்பாறை திருக்கோவில் பொலிஸ்ப் பிரிவுக்குட்பட்ட சாகாம் குடிநிலம் கிராமத்தில் வீட்டின் பின்புறத்திலிருந்து சிதைவடைந்த நிலையில் சுமார் ஏழுமாத சிசுவின் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக பொலிசாரின் ஆரம்ப கட்ட விசாரணைகள் மூலமாக தெரிவிக்க்கப்பட்டுள்ளது.சம்பவம் தொடர்பாக மேலும் தெரிவருவது,
கடந்த ஞாயிற்றுக்கிழமை(22) 38 வயதுடை பெண் ஒருவர் குடிநிலம் கிராமத்தில் வயிற்றில் இருந்த கட்டி ஒன்று வெடித்துவிட்டதாக தெரிவித்து அவசர அழைப்பு நோய்காவு வண்டியின் ஊடாக கல்முனை ஆதார வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டு அவரச சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதனைத் தொடர்ந்து அவரை வைத்தியர்கள் பரிசோதித்துப் பார்த்த வேளை குழந்தை பிறந்தமைக்கான அடையாளங்கள் காணப்பட்டுள்ளன. இதனையடுத்து அப்பகுதி பொலிசார், கிராம சேவை உத்தியோகத்தர் மற்றும் குடும்ப நல உத்தியோகத்தர் ஆகியோருக்கு தகவல் வழங்கப்பட்டு குழந்தையை தேடிவந்த நிலையில் நேற்று திங்கட்கிழமை மாலை குறித்த பெண் குடியிருந்த வாடகை வீட்டின் பின்புறத்தில் சிதை வடைந்த நிலையில் இருந்து பொலிசாரினால் சிசு ஒன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து இன்று செவ்வாய்க்கிழமை காலை அம்பாறை குற்றத் தடயவியல் பொலிசார் சம்பவ இடத்திற்கு சென்று தடயவியல் மற்றும் வாக்கு மூலங்களை பெற்று கொண்டு இருந்ததுடன் குறிந்த பெண் தற்போதும் கல்முனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருவதுடன் குறித்த சிசுவின் சடலம் தொடர்பான மேலதிக விசாரணைகளை திருக்கோவில் பொலிசார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment