Wednesday, 25 December 2019

காட்டு யானைகள்  அடடாகாசம் 

haran


அம்பாறை லாகுகல வன ஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்கள நிருவாக எல்லைக்குட்பட்ட பொத்துவில் கோமாரி மற்றும் செல்வபுரம் ஆகிய கிராமங்களுக்குள் இன்று புதன்கிழமை அதிகாலை வேளையில் படையெடுத்த காட்டு யானைகள் மதிகள் மற்றும் பயிர்களை நாசம் செய்துள்ளதுடன் ஒருவர் காயமடைந்துள்ளார்.

இதனையடுத்து லாகுகல வன ஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகளுக்கு தொலைபேசி ஊடாக தகவல்கள் வழங்கப்பட்டு இருந்தன இதனைத் தொடர்ந்து இன்று புதன்கிழமை கோமாரி பிரதேசத்திற்கு வருகைதந்த வன ஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்கள அதிகாரி டபிள்யு.பி.ஜனக்க தலைமையிலான குழுவினர் சேதவிபரங்களை பார்வையிட்டு மதிப்பீடு செய்து பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நட்டஈடு பெற்றுக் கொள்வதற்கான விண்ணப்ப படிவங்களை வழங்கி இருந்தனர்.

காட்டு யானைகளில் தாக்கம் காரணமாக நான்கு வீடுகளில் மதில்கள் மூன்று தோட்ட காணிகளின் வேலிகள் சேதமடைந்து இருந்ததுடன் ஒருவர் யானை துரத்தியதில் விழுந்து தெய்வாதினமாக உயிர் தப்பியதுடன் குறித்த நபரின் இரண்டு கால்களும் காயமடைந்தன.

இது தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த மக்கள் பொத்துவில் கோமாரி பிரதசங்களில் தொடர்ச்சியாக காட்டு யானைகள் வருவதாகவும் தற்போது நள்ளிரவு நேரங்களில் மக்கள் குடியிருப்பு பகுதிகளுக்குள்ளும் நுழைந்து வேலிகள் மற்றும் மதில்களை உடைத்துக் கொண்டு வாழை, தென்னை பலா மரங்களையும் வீட்டுத் தோட்டப் பயிர்களையும் நாசம் செய்து வருவதுடன் கிராம மக்களின் உயிர்களுக்கும் அச்சுறுத்தலாக இருந்து வருவதாக பாதிக்கப்பட்ட மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

குறித்த பிரச்சினைகள் தொடர்பாக வருகைதந்த வன ஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகளிடம் மக்கள் தெரிவித்த போது தாம் உயர்மட்ட அதிகாரிகளுக்கு அறிக்கையிட்டு இருப்பதாகவும் மிக விரையில் காட்டு யானைகளில் அச்சுறுத்திலில் இருந்து மக்களைப் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவித்து இருந்தனர்.


No comments: