Wednesday, 22 May 2019
Monday, 20 May 2019
Saturday, 18 May 2019
சிறுமியின் பொதுச்சுடருடன் முள்ளிவாய்க்காலில் இடம்பெற்ற 10 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு
Niloch.K
முள்ளிவாய்க்கால் படுகொலையின் பத்தாம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் இன்று காலை 10.30 மணியளவில் முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் நினைவு தூபியில் ஆயிரக்கணக்கான மக்களின் கண்ணீர் காணிக்கையுடன் நடைபெற்றது .
தமிழ் மக்கள் பல்லாயிரக்கணக்கில் கொன்றொழிக்கப்பட்டு யுத்தம் நிறைவுக்கு வந்த நாளான 2009 மே 18 ஆம் திகதியன்று தமிழ் மக்கள் தமிழ் இனப்படுகொலை நினைவு நாளாக வருடம் தோறும் நினைவுகூர்ந்து வருகின்றனர். அந்த வகையில் யுத்தம் நிறைவடைந்து பத்தாவது ஆண்டு நிறைவடைகின்ற நிலையில் நாட்டில் அவசரக்கால சட்டம் அமுலில் உள்ள நிலையிலும் படையினர் மற்றும் புலனாய்வாவார்களின் தீவிர கண்காணிப்புகளுக்கு மத்தியில் இம்முறையும் முள்ளிவாய்க்கால் தமிழின பேரவல நினைவேந்தல் நிகழ்வுகள் உணர்வெளிச்சியுடன் இடம்பெற்றன.
சிறப்பாக இவ்வருடம் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் பொதுக்கட்டமைப்பின் (வடக்கு கிழக்கு ) ஏற்பாட்டில் நினைவேந்தல் நிகழ்வுகள் ஒழுங்குபடுத்தப்பட்டு நேர்த்தியாக நடைபெற்றது. பாதுகாப்பு ஏற்பாடுகளைக் கருத்தில் கொண்டு நூற்றுக்கும் மேற்பட்ட பொலிஸார் குவிக்கப்பட்டுப் பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டிருந்தது
அந்த வகையில் இன்றைய தினம் தமிழினப் படுகொலை 10 ஆம் ஆண்டு நினைவு நிகழ்வுகள் காலை பத்து முப்பது மணிக்கு அக வணக்கத்தோடு ஆரம்பித்துத் தொடர்ந்து முள்ளிவாய்க்காலில் தனது தாய் இறந்துகிடப்பதை கூட அறியாது அந்த தாயின் மார்பில் பால் குடித்தும் அவ்வேளையில் தனது ஒரு கையை இழந்த சிறுமி ஒருவரால் பொதுச்சுடர் ஏற்றப்பட்டது.
தொடர்ந்து மக்களால் உயிரிழந்தவர்களுக்காக நினைந்துருகி சுடர்கள் ஏற்றப்பட்டது. அதனைத் தொடர்ந்து தமிழினப் படுகொலை நாளான மே 18 பிரகடனம் வெளியிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து நிகழ்வில் கலந்துகொண்டவர்கள் மலர் அஞ்சலி செலுத்தினர். சர்வமத தலைவர்கள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் அனைவரும் மக்களோடு மக்களாக நின்று உயிரிழந்த உறவுகளுக்காகச் சுடர் ஏற்றி மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்
இந்த நினைவேந்தல் நிகழ்வில் முள்ளிவாய்க்காலில் 2009 ஆம் ஆண்டு மக்கள் உணவாக உட்கொண்டு பசிபோக்கிய முள்ளிவாய்க்கால் கஞ்சி அனைவருக்கும் வழங்கப்பட்டது.
இந்த நிகழ்வில் முன்னாள் முதலமைச்சர் சி வி விக்னேஸ்வரன் , பாராளுமன்ற உறுப்பினர்கள் மாவை சேனாதிராசா ,சிவமோகன் ,சிவசக்தி ஆனந்தன் ,சாள்ஸ் நிர்மலநாதன் ,செல்வம் அடைக்கல நாதன் , முன்னாள் மாகாணசபை அமைச்சர் அனந்தி சசிதரன் , சிவநேசன் ,ஐங்கரநேசன் ,முன்னாள் மாகாசபை உறுப்பினர்கள் சிவாஜிலிங்கம் ,ரவிகரன் ,கமலேஸ்வரன் ,புவனேஸ்வரன் ,சயந்தன் .கஜதீபன் ,யாழ் மாநகர மேஜர ஆர்னோல்ட் , முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமசந்திரன் , தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் , தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டனர் .
அம்பாறையிலும் கண்ணீர்மல்க இடம்பெற்ற முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு!
Niloch.K
அம்பாறை திருக்கோவில் பிரதேசத்தில் மே18 முள்ளிவாய்க்காலில் உயிர் நீத்த உறவுகளுக்கு ஆத்ம சாந்தி வேண்டிய தமிழ் உறவுகளின் நினைவேந்தல் நிகழ்வு கண்ணீர்மல்க தீபம் ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.
இந் நினைவேந்தல் நிகழ்வானது அம்பாறை மாவட்டம் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கத்தின் மாவட்ட இணைப்பாளர் தம்பிராசா செல்வராணி தலைமையில் திருக்கோவில் மாணிக்கப்பிள்ளையார் ஆலயத்தின் முன்பாக இடம்பெற்றன.
இதன்போது பிரதான சுடர் ஏற்றப்பட்டு தாய்மார் கண்ணீர்மல்க மெழுகுவர்த்திகள் ஏற்றி உயிர்நீத்த தமது உறவுகளின் ஆத்மசாந்தி வேண்டிய பிரார்த்தனைகளில் ஈடுபட்டனர்.
இந் நினைவேந்தல் நிகழ்வில் தாய்மார்கள் கலந்து கொண்டதுடன் திருக்கோவில் பிரதேசசபை தவிசாளர் இ.வி.கமலராஜன், காரைதீவு பிரதேசசபை தவிசாளர் கே.ஜெயசிறில் மற்றும் பொது மக்களும் கலந்து கொண்டு தமது உறவுகளுக்கு அமைதியான முறையில் அஞ்சலிகளை செலுத்தினர்.
வரலாற்றில் முதல் தடவையாக கல்முனை மாநகரம் பௌத்தகொடிகளாலும் வெசாக் கூடுகளாலும் அலங்கரிப்பு
Niloch.K
புத்த பகவானின் 3 அம்சங்களை வைத்து கொண்டாடுகின்ற வெசாக் பண்டிகை மிக கோலாகலமாக கல்முனை மாநகரில் இடம்பெற்று வருகின்றது.
கடந்த 30 வருட யுத்தத்தின் பின்னர் இந்த பிரதேசத்தில் வெசாக் கொண்டாடப்படுவது மகிழ்ச்சி அளிப்பதாக கல்முனை சுபத்ராராமய விகாராதிபதி வண.ரண்முத்துகல சங்க ரத்ண தேரர் மகிழ்ச்சியுடன் கீழ்க்கண்டவாறு தெரிவிக்கின்றார்.
அதாவது விசேடமாக தமிழ் சிங்கள மக்கள் ஒன்றாக சேர்ந்து இப்பிரதேசத்தில் இந்நாளை கொண்டாடுவது மகிழ்ச்சியாக உள்ளது.
இப்பிரதேச வெளிச்சகூடுகளை பொருத்தி தருபவர்கள் தமிழ் மக்கள் ஒன்றியம் ஆகும்.அதற்காக பெருமைப்படுகின்றேன்.கல்முனை பிராந்தியத்தில் பௌத்த கொடி வெசாக்கூடு முதற்தடவையாக கட்டப்படுவது வரலாற்றில் முதல்தடவையாகும்.மக்கள் சந்தோசத்துடனும் மகிழ்ச்சியுடனும் இங்கு வாழ்கின்றார்கள்.புத்த பகவானின் அந்த 3 அம்ச வாழ்க்கை வரலாற்றை ஞாபகப்படுத்தும் கொண்டாட்டத்தில் நீங்கள் அனைவரும் சந்தோசமாகவும் அமைதியாகவும் கொண்டாட வேண்டும் என கேட்டுக்கொள்கின்றேன்.
இப்பிரதேச வெளிச்சகூடுகளை பொருத்தி தருபவர்கள் தமிழ் மக்கள் ஒன்றியம் ஆகும்.அதற்காக பெருமைப்படுகின்றேன்.கல்முனை பிராந்தியத்தில் பௌத்த கொடி வெசாக்கூடு முதற்தடவையாக கட்டப்படுவது வரலாற்றில் முதல்தடவையாகும்.மக்கள் சந்தோசத்துடனும் மகிழ்ச்சியுடனும் இங்கு வாழ்கின்றார்கள்.புத்த பகவானின் அந்த 3 அம்ச வாழ்க்கை வரலாற்றை ஞாபகப்படுத்தும் கொண்டாட்டத்தில் நீங்கள் அனைவரும் சந்தோசமாகவும் அமைதியாகவும் கொண்டாட வேண்டும் என கேட்டுக்கொள்கின்றேன்.
மேலும் கடந்த 21 ஆம் தினம் இடம்பெற்ற அசாதாரண நிலைமையை அடுத்து மிகவும் அமைதியான சூழ்நிலை காணப்படுகிறது.இதற்கு எமது முப்படையினருக்கு நன்றிகளை தெரிவிக்க விரும்புகின்றேன்.இனிமேல் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறாத வண்ணம் எல்லோரும் சமாதானமாக வாழ முன்வர வேண்டும் என கேட்டுக்கொள்கின்றேன் என கூறினார்.
மேலும் முப்படையினரின் பாதுகாப்புடன் வெசாக்கை முன்னிட்டு வரலாற்றில் முதல் தடவையாக கல்முனை மாநகரம் பௌத்தகொடிகளாலும் வெசாக் கூடுகளாலும் அலங்கரிக்கப்பட்டுள்ளது.
கல்முனை விகாராதிபதி வண.ரண்முத்துக்கல சங்கரத்ன தேரரின் வழிகாட்டலில் கல்முனை தமிழ் இளைஞர்கள் இன ஐக்கியம் கருதி மேற்படி அலங்காரத்தை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
N |
மக்களின் கண்ணீரால் நனைந்த முள்ளிவாய்க்கால் மண்! கொளுத்தும் வெய்யிலிலும் உணர்வுபூர்வ அஞ்சலி
Niloch.K
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வின் பத்தாவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று முள்ளிவாய்க்கால் மண்ணில் மிகவும் உணர்வுபூர்வமாக அனுஷ்ட்டிக்கப்பட்டது.
கொளுத்தும் வெய்யிலிலும் ஆயிரக்கணக்கான மக்கள் முள்ளிவாய்க்கால் மண்ணுக்கு வந்து, இறுதி யுத்தத்தில் படுகொலை செய்யப்பட்ட தமிழ் உறவுகளுக்காக கண்ணீர் மல்க உணர்ச்சிபூர்வமாக தமது அஞ்சலிகளை செலுத்தியுள்ளனர்.
நாட்டில் தற்பொழுது நடக்கும் அசம்பாவிதங்களை பொருட்படுத்தாது மக்கள் முள்ளிவாய்க்கால் நிகழ்வுக்கு வந்து படுகொலை செய்யப்பட்ட தமது உறவுகளை நினைந்துருகி அஞ்சலி செலுத்தியமையை காணக்கூடியதாக இருந்தது.
யாழ் பல்கலை மாணவர்களுக்கு ஓர் மிக முக்கிய அறிவிப்பு…! 22 ஆம் திகதி மீண்டும் ஆரம்பமாகும் விரிவுரைகள்…!!
NILOCH.K
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் மருத்துவபீடம் தவிர்ந்த அனைத்து பீடங்களையும் சேர்ந்த மாணவர்களு க்கான கல்விநடவடிக்கைகள் யாவும் எதிர்வரும்22.05.2019 (புதன்) ஆரம்பமாகவுள்ளன என்று பதிவாளர் வி. காண் டீபன்அறிவித்துள்ளார்.
கலைப்பீடம்(இராமநாதன்நுண்கலைப்பீடம்உட்பட), விஞ்ஞானபீடம், முகாமைத்துவ மற்றும் வணிகபீடம், விவசாயபீடம், பொறியியற்பீடம், தொழில்நுட்பபீடம், ஆகிய பாடங்களுக்கும் சித்தமருத்துவ அலகுக்குமான கல்வி நடவடிக்கைகளே எதிர்வரும் 22 ஆம் திகதி புதன்கிழமை ஆரம்பிக்கப்படவுள்ளன.கடந்த ஏப்ரல்21 ஆம் திகதி முதல் நாட்டில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலை காரணமாக ஒத்திவைக்கப்பட்ட பரீட்சைகளில் மருத்துவபீடம் தவிர்ந்த ஏனையபீடங்கள் அனைத்துக்குமான பரீட்சைகள் எதிர்வரும்27 ஆம் திகதி திங்கட்கிழமையிலிருந்து ஆரம்பமாகி நடைபெறவுள்ளன.
விடுதிகளில் தங்கியிருக்கும் மாணவர்களை எதிர்வரும்21 ஆம் திகதி திங்கட்கிழமை முதல் திரும்புமாறும், விடுதி களின் உள்ளேயும், பல்கலைக்கழகத்தின் சகல பகுதிகளிலும் மாணவர்கள் தங்கள் அடையாளத்தை உறுதிப்படுத்தும் வகையில் பல்கலைக்கழகத்தினால் வழங்கப்பட்ட அடையாள அட்டை அல்லது ஆவணம் ஒன்றினை எடுத்து வரவேண்டும் என்றும் பதிவாளர் தனது அறிவித்தலில் குறிப்பிட்டுள்ளார்.
உயிர் நீத்த அதனை உதிர உறவுகளின் ஆத்ம சாந்திக்காய் பிரார்த்திப்போம்....
NILOCH.K
தமிழின அழிப்பின் பத்தாவது ஆண்டு நினைவேந்தலை நாம் இன்று கண்ணீருடன் அனுஷ்டித்து கொண்டிருக்கின்ற போதும் யுத்தம் நம் இதயங்களில் தந்து சென்ற வடு எத்தனை வருடங்கள் கடந்தாலும் மாறாதது.
நூற்றுக்கணக்கான பொலிஸார் பலத்த பாதுகாப்பை வழங்க இன்றைய தினம் முள்ளிவாய்க்கால் மண் எமது உறவுகளின் கண்ணீரில் நனைந்துள்ளது.
இவ்வாறான சந்தர்ப்பத்தில் துயர் சுமந்து நிற்கும் எம் உறவுகளுக்கு மத்தியில் முள்ளிவாய்க்கால் துயரின் சாட்சியாக வாழ்ந்து கொண்டிருக்கும் சிறுமி ராகினி இன்று பொது ஈகைச்சுடரை முதன்முதலாக ஏற்றிவைத்திருந்தார்.
முள்ளிவாய்க்கால் யுத்தம் நடந்தபோது இலங்கை அரச படைகள் நடத்திய கோரத் தாக்குதலில் சிறுமி ராகினி தனது கையொன்றை பறிகொடுத்திருந்தார்.
அதைவிட பேரவலம் என்னவெனில் இறந்த தனது தாயிடம், அப்போது பிறந்து எட்டு மாதங்களே ஆகியிருந்த ராகினி பால் உண்ட காட்சி தான்.
தாயின் உயிர் பிரிந்தது அறியாமல், தந்தை படுகாயங்களுக்கு இலக்காகி உயிருக்கு போராடி கொண்டிருந்தது தெரியாமல் அந்த எட்டு மாத பச்சிளம் குழந்தை தாயிடம் பால் உண்ட காட்சி அனைவரது நெஞ்சையும் கனக்கச் செய்து விட்டது.
தற்போது ராகினி அப்பம்மாதான் பாதுகாப்பில் வளர்ந்து வரும் நிலையில் பதினொரு வயது சிறுமியான அவரே இன்று ஈகைச்சுடரை ஏற்றி நினைவேந்தலை ஆரம்பித்து வைத்துள்ளமையாது முள்ளிவாய்க்கால் பேரவலத்தை கண்முன்னே கொண்டு வந்துள்ளது.
ராகினி போன்ற எத்தனையோ குழந்தைகள் இறுதி யுத்தத்தின் போது தாயை இழந்து வாழந்து கொண்டுதான் இருக்கின்றனர். இன்னும் எத்தனையோ துயரங்கள் நினைக்கும் போது பதறுகிறது நெஞ்சம்.
பலத்த காற்றுடன் மழை
sriram..
திருக்கோவில் பிரதேசத்தில் நேற்று வெள்ளிக்கிழமை மாலை (17) பலத்த காற்றுடன் மழை பெய்ததுடன் மின்னல் தாக்கமும் அதிகமாகக் காணப்பட்டது.
திருக்கோவில் பிரதேசத்தில் நேற்று வெள்ளிக்கிழமை மாலை (17) பலத்த காற்றுடன் மழை பெய்ததுடன் மின்னல் தாக்கமும் அதிகமாகக் காணப்பட்டது.
Wednesday, 15 May 2019
Tuesday, 14 May 2019
றேஞ்சர்ஸ் விளையாட்டுக்கழக RPL போட்டியில் டா டேவேல் அணியினர் வெற்றி
Niloch.K
Thambiluvil
தம்பிலுவில் றேஞ்சர்ஸ் விளையாட்டுக்கழகத்தினால் திருக்கோவில் பிரதேச விளையாட்டு கழகங்கள், விளையாட்டு வீரர்களுக்கு இடையே ஒற்றுமையையும் மற்றும் பலத்தினையும் ஏற்படுத்தும் வகையிலும் மற்றும் வளர்ந்து வரும் விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்கும் வகையிலும் அணிக்கு பதினொருவர்(11) கொண்ட, எட்டு (8) அணிகளுக்கான றேஞ்சர்ஸ் பிரிமியர் லீக் சுற்று போட்டியின் [RPL கிரிக்கெட் சுற்றுப் போட்டி RPL-2019 (SEASON-IX)] 9வது போட்டி நிகழ்வானது கடந்த 19.04.2018 வெள்ளிக்கிழமை அன்று தம்பிலுவில் மத்திய கல்லூரி (தேசிய பாடசாலை) மைதானத்தில் ஆரம்பமானது.
Monday, 13 May 2019
இலங்கை வரவிருக்கும் பங்களாதேஷ்
Niloch
இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையைக் கருத்திற்கொண்டு இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையில் எதிர்வரும் ஜூலை மாதம் நடைபெறவிருந்த ஒருநாள் கிரிக்கெட் தொடரை காலவரையறையின்றி ஒத்திவைக்க பங்களாதேஷ் கிரிக்கெட் சபை தீர்மானித்துள்ளது.
Monday, 6 May 2019
Sunday, 5 May 2019
97.5 மில்லியன் ரூபா
(மண்டூர் ஷமி)
வெல்லாவெளி பிரதேச செயலகப்பிரிவில் கம்பெரெலிய திட்டத்தின் கீழ்
இரு நாட்களில் 42 வேலைத்திட்டங்களுக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு
அண்மையில் நாடளாவிய ரீதியில் செயற்படுத்தப்பட்டு வரும் கம்பெரெலிய துரித கிராமிய அபிவிருத்தி திட்டத்தின் கீழ் 97.5 மில்லியன் ரூபா போரதீவுப்பற்று வெல்லாவெளி பிரதேச செயலகப்பிரிவின் கீழ் தெரிவு செய்யப்பட்ட 42 வேலைத்திட்டங்களுக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு கடந்த இரு தினங்களாக பிரதேச செயலாளர் ஆர்.இராகுலநாயகி தலைமiயில் நடைபெற்றது.
வெல்லாவெளி பிரதேச செயலகப்பிரிவில் கம்பெரெலிய திட்டத்தின் கீழ்
இரு நாட்களில் 42 வேலைத்திட்டங்களுக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு
அண்மையில் நாடளாவிய ரீதியில் செயற்படுத்தப்பட்டு வரும் கம்பெரெலிய துரித கிராமிய அபிவிருத்தி திட்டத்தின் கீழ் 97.5 மில்லியன் ரூபா போரதீவுப்பற்று வெல்லாவெளி பிரதேச செயலகப்பிரிவின் கீழ் தெரிவு செய்யப்பட்ட 42 வேலைத்திட்டங்களுக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு கடந்த இரு தினங்களாக பிரதேச செயலாளர் ஆர்.இராகுலநாயகி தலைமiயில் நடைபெற்றது.
Thursday, 2 May 2019
Wednesday, 1 May 2019
Subscribe to:
Posts (Atom)