Thursday, 17 May 2018


(செ.துஜியந்தன்)
இம்முறை மட்டக்களப்பு – அம்பாறை ஆகிய மாவட்டத்தில் மரமுந்திரிச் செய்கையில் ஈடுபட்டவர்கள் நஷ்டத்திற்குள்ளாகியுள்ளதுடன் பாதிக்கப்பட்டுள்ள தமக்கு நஷ்டஈடு வழங்கப்பட வேண்டும் என கோரிக்கை விடுகின்றனர்.

கடந்த வருடங்களைப் போன்று இவ் வருடமும் மட்டக்களப்பு மாவட்டத்தில் மரமுந்திரிச் செய்கை மேற்கொள்ளப்பட்டிருந்தது. சுமார் 4 ஆயிரம் ஏக்கரில் பயிர்ச்செய்கை பண்ணப்பட்டிருந்தது. இவற்றில் இருந்து அறுவடை மிகக் குறைந்தளவிலே கிடைத்திருந்தன. இதனால் இம்முறை முந்திரியம் பழம் விற்பனையும் அமோகமாக நடைபெறவில்லை.

கிரான், வாகரை, ஆரையம்பதி, செங்கலடி, புதுக்குடியிருப்பு, தாழங்குடா, கிரான்குளம், திருக்கோவில் பெரியநீலாவணை போன்ற பகுதிகளில் முந்திரியம் மரங்களில் பூக்கள் கருகிவிட்டது. அத்துடன் மரமுந்திரியில் ஈடுபட்டபலர் அச்செய்கையை கைவிடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
இவர்களுக்கான ஊக்குவிப்புக்கள், நஷ்ட ஈடுகளை வழங்க சம்பந்தப்பட்ட திணைக்களம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என கோரிக்கை விடுக்கின்றனர்.
மரமுந்திரிச் செய்கையாளர்கள் பாதிப்பு! Rating: 4.5 Diposkan Oleh: Viveka Viveka
haran

No comments: