Sunday, 13 May 2018

மாணவர்களுக்குப் புத்தகப் பைகள்

haran

சுவிஸ் உதயம் அமைப்பினால் கோளாவில் வித்தியாலய மாணவர்களுக்குக் கற்றல் உபகரணம் வழங்கிவைப்பு


 2 ads

(சா.நடனசபேசன்)

சுவிஸ் உதயம் அமைப்பினால் திருக்கோவில் கல்வி வலயத்திற்குட்பட்ட கோளாவில் பெரு நாவலர் வித்தியாலய மாணவர்களுக்குக் கற்றல் உபகரணம் வழங்கிவைக்கும் நிகழ்வு வெள்ளிக்கிழமை அதிபர் வெ.கனகரெத்தினம் தலைமையில் இடம்பெற்றது .
இப் பாடசலையின் அதிபர் சுவிஸ் உதயம் அமைப்பிடம் வேண்டிக் கொண்டதற்கு இணங்கவே இவ் உதவி வழங்கி வைக்கப்பட்டது.
இந் நிகழ்வில் சுவிஸ் உதயத்தின் பொருளாளர் சமூகசேவகர் க.துரைநாயகம் சுவிஸ் உதயத்தின் கிழக்;குமாகாணக்கிளைத் தலைவரும் ஓய்வு நிலை பிரதிக்கல்விப் பணிப்பாளருமான மு.விமலநாதன் சுவிஸ் உதயத்தின் கிழக்குமாகாணப் பொருளாளர் பாவாணர் அக்கரைப்பாக்கியன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இப் பாடசாலையில் கல்வி கற்கின்ற தரம் 3,4,5 ஆகிய வகுப்புக்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு கற்றல் உபகரணம் வழங்கிவைக்கப்பட்டுள்ளது.
 பாடசாலை மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்களை வழங்கிவைத்த சமூகசேவகர்களான சுவிஸ் உதயத்தின் தலைவர்; டி.சுதர்சன் செயலாளர் வெ.ஜெயக்குமார் பொருளாளர் க.துரைநாயகம் அத்தோடு நிருவாகசபை உறுப்பினர்கள்  மற்றும் கிழக்குக்குமாகாணக் கிளை நிருவாகத்தினர் அனைவருக்கும் அதிபர் நன்றி தெரிவித்துள்ளார்.















சுவிஸ் உதயம் அமைப்பினால் கோளாவில் வித்தியாலய மாணவர்களுக்குக் கற்றல் உபகரணம் வழங்கிவைப்பு Rating: 4.5 Diposkan Oleh: Nadanasabesan samithamby

No comments: