Sunday, 20 May 2018

15 வயது சிறுவன் ஒருவன் நீரில் மூழ்கி உயிரிழப்பு


மட்டக்களப்பு மண்டூர் மூங்கில் ஆற்றில் நண்பர்களுடன் நீராடச் சென்ற 15 வயது சிறுவன் ஒருவன் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் இன்று ஞாயிற்றுக்கிழமை பகல் இடம்பெற்றுள்ளதாக வெல்லாவெளி பொலிசார் தெரிவித்தனர்.


மண்டூர் கணேசபுரத்தைச் சோர்ந்த 15 வயதுடைய உமாபதி கிசான் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித் சிறுவன் சம்பவதினமான இன்று பகல் 12 மணியளவில் வீட்டில் இருந்து 6 நண்பர்களுடன் மூங்கில் ஆற்றில் நீராடச் சென்று நீராடி விளையாடியபோது குறித்த சிறுவன் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளான்.

இதனையடுத்து உடனடியாக குறித்த சிறுவனின் உறவினர்களுக்கு தெரியப்படுத்திய போது பொதுமக்கள் உதவியுடன் ஆற்றில் தேடியபோது ஆற்றில் உள்ள மூங்கில் மரத்துக்குள் சிக்குண்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.

இதனை தொடர்ந்து சடலம் களுவாஞ்சிக்கடி வைத்தியசாலையி ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன் இது தொடர்பான விசாரணைகளை வெல்லாவெளி பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.
மண்டூர் ஆற்றில் நண்பர்களுடன் நீராடச் சென்ற 15 வயது சிறுவன் நீரில் மூழ்கி உயிரிழப்பு! Rating: 4.5 Diposkan Oleh: Viveka Viveka
haran

No comments: