Thursday, 31 May 2018

இலங்கையின் புதிய வரைபடம்


காலி முகத்திடலில் நிர்மாணிக்கப்பட்டுவரும் துறைமுக நகரை உள்ளடக்கிய தலைநகரின் புதுப்பிக்கப்பட்ட வரைபடம் வெளியிடப்பட்டுள்ளது.

Wednesday, 30 May 2018

தாலியை அறுத்துச் சென்ற இளைஞன்

திருக்கோவிலில்   இளைஞன் ஒருவர் வீட்டுக்கு முன்னால் நின்றுகொண்டு இருந்த பெண்ணின் 7அரைப் பவுண் தாலியை அறுத்துச் சென்றுள்ளதாக திருக்கோவில் பொலிஸ் நிலையத்தில் குறித்த பெண் முறைப்பாடு ஒன்றினை பதிவு செய்துள்ளாா்.

கண்டிய மன்னரின் மானியம் பெற்ற பட்டிநகர் ஸ்ரீ கண்ணகி அம்மன் ஆலய வருடாந்த வைகாசி திருக்குளிர்ச்சி



(ஹிருஸ்மன்) கண்ணகி வழிபாட்டிற்குப் பிரசித்தி பெற்ற இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் அம்பாறை மாவட்டம், ஆலையடிவேம்பு பிரதேசத்திலுள்ள பனங்காடு, பட்டிநகரில் குடிகொண்டுள்ள அருள்மிகு ஸ்ரீ கண்ணகி அம்மன் ஆலய வருடாந்த வைகாசி திருக்குளிர்ச்சி மகோற்சவம் நேற்று (29) பல்லாயிரக்கணக்கான அம்மன் அடியவர்களின் பிரசன்னத்துக்கு மத்தியில் நடைபெற்றது.

Monday, 28 May 2018

வாள்வெட்டு தாக்குதலில் ஊடகவியலாளர்



யாழ் செய்திகள்:யாழ்ப்பாணம், கொழும்புத்துறை பகுதியில் இனந்தெரியாத குழுவொன்றினால் நடத்தப்பட்ட வாள்வெட்டு தாக்குதலில் ஊடகவியலாளர் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பகிடிவதையை கைவிடும் வரை மருத்துவபீடம் தொடர்ந்து மூடப்படும்

கிழக்கு பல்கலைக்கழக மருத்துவபீடத்தில் புதிய மாணவர்கள் மீது சிரேஷ்ட மாணவர்களால் மேற் கொள்ளப்பட்டுவரும் பகிடிவதையை கைவிடுவதாக உத்தரவாதம் வழங்கப்படும் வரை குறித்த பீடம் தொடர்ந்து மூடப்படும் என மருத்துவ பீடாதிபதி அருள்பிரகாசம் அஞ்சலா தெரிவித்தார்.

Thursday, 24 May 2018

ஆலையடிவேம்பில் வாழும் 3,500 இற்கும் மேற்பட்ட குடும்பங்களின் குடிநீர்ப் பிரச்சனைக்கு நிரந்தரத் தீர்வினைப் பெற்றுக்கொடுக்கும் வேலைத்திட்டம்




அம்பாறை மாவட்டம் ஆலையடிவேம்பு பிரதேசத்தில் வாழும் 3,500 இற்கும் மேற்பட்ட குடும்பங்களின் குடிநீர்ப் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வினை பெற்றுக்கொடுக்கும் வேலைத்திட்டம் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கவிந்திரன் கோடீஸ்வரனின் கோரிக்கைக்கு அமைவாக அமைச்சர் ரவூப் ஹக்கீமின் பணிப்புரையின் கீழ் அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படவுள்ளது.

Sunday, 20 May 2018

15 வயது சிறுவன் ஒருவன் நீரில் மூழ்கி உயிரிழப்பு


மட்டக்களப்பு மண்டூர் மூங்கில் ஆற்றில் நண்பர்களுடன் நீராடச் சென்ற 15 வயது சிறுவன் ஒருவன் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் இன்று ஞாயிற்றுக்கிழமை பகல் இடம்பெற்றுள்ளதாக வெல்லாவெளி பொலிசார் தெரிவித்தனர்.

Thursday, 17 May 2018


(செ.துஜியந்தன்)
இம்முறை மட்டக்களப்பு – அம்பாறை ஆகிய மாவட்டத்தில் மரமுந்திரிச் செய்கையில் ஈடுபட்டவர்கள் நஷ்டத்திற்குள்ளாகியுள்ளதுடன் பாதிக்கப்பட்டுள்ள தமக்கு நஷ்டஈடு வழங்கப்பட வேண்டும் என கோரிக்கை விடுகின்றனர்.

கடந்த வருடங்களைப் போன்று இவ் வருடமும் மட்டக்களப்பு மாவட்டத்தில் மரமுந்திரிச் செய்கை மேற்கொள்ளப்பட்டிருந்தது. சுமார் 4 ஆயிரம் ஏக்கரில் பயிர்ச்செய்கை பண்ணப்பட்டிருந்தது. இவற்றில் இருந்து அறுவடை மிகக் குறைந்தளவிலே கிடைத்திருந்தன. இதனால் இம்முறை முந்திரியம் பழம் விற்பனையும் அமோகமாக நடைபெறவில்லை.

கிரான், வாகரை, ஆரையம்பதி, செங்கலடி, புதுக்குடியிருப்பு, தாழங்குடா, கிரான்குளம், திருக்கோவில் பெரியநீலாவணை போன்ற பகுதிகளில் முந்திரியம் மரங்களில் பூக்கள் கருகிவிட்டது. அத்துடன் மரமுந்திரியில் ஈடுபட்டபலர் அச்செய்கையை கைவிடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
இவர்களுக்கான ஊக்குவிப்புக்கள், நஷ்ட ஈடுகளை வழங்க சம்பந்தப்பட்ட திணைக்களம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என கோரிக்கை விடுக்கின்றனர்.
மரமுந்திரிச் செய்கையாளர்கள் பாதிப்பு! Rating: 4.5 Diposkan Oleh: Viveka Viveka
haran

Monday, 14 May 2018

பூப்பந்தாட்ட சுற்றுப்போட்டு

haran
மட்டக்களப்பு பூப்பந்தாட்ட வீரர்களின் ஏற்பாட்டில் கிழக்குமாகாண பூப்பந்தாட்ட வீரர்களை மையப்படுத்தி மாபெரும் பூப்பந்தாட்ட சுற்றுப்போட்டு இவ் வாரம் 12 13ம் திகதிகளில் ஆரையம்பதி பூப்பந்தாட்ட உள்ளக அரங்கில் இடம்பெற்றது .

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்


கடந்த வருடம் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை ஒரு குறுகிய எல்லைக்குள் நடாத்தினோம். ஆனால் இவ்வருடம் இந்நிகழ்வினை சற்று பரந்தளவில் இரண்டு நாட்கள் அனுஷ்டிப்பதற்குத் தீர்மானித்துள்ளோம். 17ம் திகதி இரத்ததான நிகழ்வும், 18ம் திகதி நினைவேந்தல் நிகழ்வும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என கிழக்குப் பல்கலைக்கழக கலைகலாசார பீட மாணவர் ஒன்றியத் தலைவர் டினேஸ்காந்த் தெரிவித்தார்.

Sunday, 13 May 2018

மாணவர்களுக்குப் புத்தகப் பைகள்

haran

சுவிஸ் உதயம் அமைப்பினால் கோளாவில் வித்தியாலய மாணவர்களுக்குக் கற்றல் உபகரணம் வழங்கிவைப்பு


 2 ads

(சா.நடனசபேசன்)

சுவிஸ் உதயம் அமைப்பினால் திருக்கோவில் கல்வி வலயத்திற்குட்பட்ட கோளாவில் பெரு நாவலர் வித்தியாலய மாணவர்களுக்குக் கற்றல் உபகரணம் வழங்கிவைக்கும் நிகழ்வு வெள்ளிக்கிழமை அதிபர் வெ.கனகரெத்தினம் தலைமையில் இடம்பெற்றது .

Saturday, 12 May 2018

ஸ்ரீ மீனாட்சியம்மன் ஆலயத்துக்கு அருகில்

haran
இலங்கையில் அம்பாறை மாவட்டம் மாட்டுப்பளை பகுதியிலுள்ள ஸ்ரீ மீனாட்சியம்மன் ஆலயத்துக்கு அருகில் சிதைந்த நிலையில் காணப்படும் கட்டடப் பகுதி, சோழர் காலத்தில் நிர்மாணிக்கப்பட்ட இந்து ஆலயமாக இருக்கக் கூடும் எனும் நம்பிக்கை, அப்பகுதி தமிழர்களிடையே வலுப்பெற்று வருகிறது.

Friday, 11 May 2018

மாணவர்களுக்குப் புத்தகப் பைகள்



(சா.நடனசபேசன்)


சுவிஸ் உதயம் அமைப்பினால் அம்பாரை வளத்தாப்பிட்டி கிறேஸ் அக்கடமிக் பாலர் பாடசாலையினைச் சேர்ந்த 50 மாணவர்களுக்குப் புத்தகப் பைகள் வழங்கிவைக்கப்பட்டுள்ளன

இந் நிகழ்வு 11 ஆம் திகதி வெள்ளிக்கிழமை காலை கிறேஸ் அக்கடமிக் பாலர் பாடசாலை மண்டபத்தில்   நடைபெற்றது.

Thursday, 10 May 2018

ஊடகம், செய்தித்துறை பயிற்சிப் பட்டறை

haran
காட்சி ஊடகம், செய்தித்துறை, அறிவிப்பு தொடர்பான ஒருநாள் செயன்முறைப் பயிற்சிப் பட்டறையொன்று எதிர்வரும் 13ம் திகதி ஞாயிற்றுக்கிழமை கல்லடி சுவாமி விபுலானந்தா அழகியற் கற்கைகள் நிறுவகத்தில் நடைபெறவுள்ளது.

எரிபொருட்களின் விலை


இதன் படி ஒரு லீற்றர் பெற்றோல் 92 ஒக்டெய்ன் 137 ரூபாவாகவும், 95 ஒக்டெய்ன் 149 ரூபாவாகவும், ஓட்டோ டீசல் 109 ரூபாவாகவும், டீசல் 119 ரூபாவாகவும், மண்ணெண்ணெய் 101 ரூபாவாகவும் அதிகரிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.