Friday, 28 October 2016
Tuesday, 25 October 2016
கண்ணகிகிராம மக்களுக்கு விரைவில் காணி உறுதிப்பத்திரங்கள
அம்பாறை மாவட்டத்தின் ஆலையடிவேம்பு பிரதேசத்தில் கடந்த 37 வருடங்களாக காணி உறுதிப்பத்திரங்கள் இல்லாது வாழும் கண்ணகிகிராம மக்களுக்கு
காணி உறுதிப்பத்திரங்களை வழங்குவதற்கான உடன் நடவடிக்கைகளை முன்னெடுப்பேன் என அம்பாறை
மாவட்ட தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன்
உறுதி வழங்கியுள்ளார்.
ஆலையடிவேம்பு பிரதேச செயலகம் ஏற்பாடு செய்துள்ள பொது மயான சிரமதான நிகழ்வு
ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தினால் ஆலையடிவேம்பு பிரதேச சபையின் அனுசரணையோடும் 'நாம் வசிக்கும் சுற்றுச் சூழலைத் தூய்மையாக வைத்திருப்போம்' எனும் தொனிப்பொருளோடும் ஏற்பாடு
செய்யப்பட்டுள்ள பொத்துவில் வீதி, அக்கரைப்பற்று - 9 கிராம சேவகர் பிரிவிலுள்ள
பொது மயானத்தைத் துப்பரவு செய்யும் சிரமதான நிகழ்வு நாளை மறுதினம் 28-10-2016,
வெள்ளிக்கிழமை காலை 6.00 மணி முதல் நடைபெற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
Wednesday, 19 October 2016
Tuesday, 18 October 2016
மரை இறைச்சியுடன் மூவர் கைது
BY - KRISH
075 7196520
075 7196520
108 கிலோகிராம் மரை இறைச்சியை வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் அம்பாறை, சாகாமம் காட்டுப்பகுதியில் மூன்று சந்தேக நபர்கள் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
தற்போது ஏற்பட்டுள்ள வரட்சி காரணமாக திருக்கோவில் பிரதேசத்திலுள்ள குளங்களில் நீர் அருந்துவதற்காக அக்குளங்களை நாடி மிருகங்கள் வருகின்றன. இவ்வாறு வரும் மிருகங்கள் வேட்டையாடப்படுவதாக தகவல் அறிந்த பொலிஸார் இது தொடர்பாக கவனம் செலுத்தி வந்துள்ளனர்.
இந்நிலையில், நேற்று மாலை சாகாமம் விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலை அடுத்து, காட்டுப்பகுதிக்கு சென்றபோது, மேற்படி மரை இறைச்சியுடன் மூன்று சந்தேக நபர்களையும் அழைத்து வந்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
மூவரையும் பொலிஸார் கைதுசெய்துள்ளதுடன், அவர்களிடம் இருந்து 108 கிலோ மரை இறைச்சியையும் கைப்பற்றியுள்ளனர்.
இதேவேளை, மிருக வேட்டையில் ஈடுபடுவோர் உடனடியாக கைவிட வேண்டும் என்பதுடன் சட்டத்தை மதிக்காது மிருக வேட்டையில் ஈடுபடுவோருக்கு எதிராக மிக கடுமையாக சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என பொலிஸார் கூறினர்.
Friday, 14 October 2016
கல்வி நடவடிக்கைகள் ஆரம்பம்
NEWS BY- KIRUSHANTHAN
075 7196520
இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் கலை, கலாசாரப்பீடம், வர்த்தக முகாமைத்துவப்பீடம், இஸ்லாமிய கற்கைகள் அரபுமொழிப்பீடம் ஆகியவற்றின் இரண்டாம் பருவ கல்வி நடவடிக்கைகள் எதிர்வரும் 17ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழகத்தின் பதில் பதிவாளர் எம்.ஐ.நௌபர், இன்று வெள்ளிக்கிழமை (14) தெரிவித்தார்.
பிரயோக விஞ்ஞானபீடத்தின் கல்வி நடவடிக்கைகள் எதிர்வரும் 24ஆம் திகதி திங்கட்கிழமை ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
Tuesday, 11 October 2016
ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற வாணி விழா நிகழ்வுகள்
ஆலையடிவேம்பு பிரதேச செயலகம் நடாத்திய இவ்வாண்டுக்கான
கலைவாணி விழா மற்றும் வாணி விழா சிறப்பு மலர் வெளியீட்டு நிகழ்வுகள் இன்று (11) மாலை பிரதேச
செயலகக் கலாசார மண்டபத்தில் பிரதேச செயலாளர் வேதநாயகம் ஜெகதீசன் தலைமையில் வெகு சிறப்பாக
இடம்பெற்றன.
வீரமகா காளியம்மன் ஆலய தீ மிதிப்பு
Monday, 10 October 2016
ஆலையடிவேம்பில் இடம்பெற்ற பிரதேச ஒருங்கிணைப்பு குழு கூட்டம்
ஆலையடிவேம்பு
பிரதேச ஒருங்கிணைப்புக் குழுவின் இவ்வருடத்திற்கான இரண்டாவது கூட்டம் அதன்
தலைவரும், அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், மாவட்ட அபிவிருத்திக் குழுவின்
இணைத் தலைவருமான கவிந்திரன் கோடீஸ்வரன் தலைமையில் இன்று (10) காலை ஆலையடிவேம்பு
பிரதேச செயலகக் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
Friday, 7 October 2016
குடிநீருக்கான யுத்தங்கள் மூளலாம்...
நேரடி பார்வை அஹலிஹா ,காமிலா
வளமுள்ள கிழக்கில் வளமற்றுக் கிடக்கும் மொறவேவ
உலகில் மூன்றில் ஒரு பகுதி நிலம் ! மூன்றில் இரண்டு பகுதி நீர் ! அந்த ஒருபகுதி நிலப்பரப்பில் வாழ்வனவற்றுக்கு இந்த நீர் அத்தியாவசியமானது. ஆனால் என்றும் போதமை உள்ளது. எதிர்காலத்தில் குடிநீருக்கான யுத்தங்கள் மூளலாம் என ஆய்வாளர்கள் கூறத்தொடங்கிவிட்டனர்.
எதிர் காலத்தில் அல்ல, இப் பொளுதிலிருந்தே ஆங்காங்கு குடிநீர் பிரச்சினைகள் உருவாகிவிட்டதனை அவதானிக்க முடிகின்றது.
நெய்னாகாடுப் பிரதேசத்தில் 16 வேலைத்திட்டங்கள்
BY - KRISH
அம்பாறை, நெய்னாகாடுப் பிரதேசத்தில் 16 வேலைத்திட்டங்களை எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (09) முன்னெடுக்கவுள்ளதாக திகாமடுல்ல நாடாளுமன்ற உறுப்பினரும் அம்பாறை மாவட்ட ஒருங்கிணைப்பு இணைத் தலைவருமான எம்.ஐ.எம்.மன்சூர் இன்று (07) தெரிவித்தார்.
சம்மாந்துறை பிராந்திய நீர்ப்பாசன பொறியியலாளர் எம்.எஸ்.றிப்னாஸ் தலைமையில் ஞாயிற்றுக்கிழமை காலை 10.00 மணிக்கு இந்த வேலைத்திட்டங்கள் யாவும் 52,014,000.00 ரூபாய் நிதியில் ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் அவர் கூறினார்.
Wednesday, 5 October 2016
NEWS BY- KIRUSHANTHAN
2016ஆம் ஆண்டுக்கான ஐந்தாம் தரப் புலமைப்பரிசில் பரீட்சைப் பெறுபேறுகள் செவ்வாய்க்கிழமை (04) இரவு வெளியாகியுள்ள நிலையில் அம்பாறை, அக்கரைப்பற்று மற்றும் திருக்கோவில் கல்வி வலயங்களில் 338 மாணவர்கள் சித்தி பெற்றுள்ளதாக அவ்வவ் வலயக் கல்லிப் பணிப்பாளர்கள் தெரிவித்தனர்.
அக்கரைப்பற்றுக் கல்வி வலயத்தில் 228 மாணவர்கள் சித்தி பெற்றுள்ளனர். இந்நிலையில், அக்கரைப்பற்றுக் கோட்டத்தில் 98 பேரும் அட்டாளைச்சேனைக் கோட்டத்தில் 91 பேரும் பொத்துவில் கோட்டத்தில் 39 பேரும் சித்தி பெற்றுள்ளதாக அக்கரைப்பற்று வலயக் கல்விப் பணிப்பாளர் ஏ.எல்.எம்.ஹாஸீம் தெரிவித்தார்.
அக்கரைப்பற்றுக் கல்வி வலயத்திலுள்ள அக்கரைப்பற்று ஆண்கள் வித்தியாலயத்தைச் மாணவன் முஹம்மட் ஜாபிர் அத்தீக் அஹமட் 187 புள்ளிகளைப் பெற்று அம்பாறை மாவட்டத்தில் முதலாமிடத்தைப் பெற்றுள்ளதாக அவ்வித்தியாலய அதிபர் எம்.எஸ்.அப்துல் நயீம் தெரிவித்தார். இதேவேளை, திருக்கோவில் கல்வி வலயத்தில் 110 மாணவர்கள் சித்தி பெற்றுள்ளதாக அவ்வலயக் கல்விப் பணிப்பாளர் ஆர்.சுகிர்தராஜன் தெரிவித்தார். பொத்துவில் கோட்டத்தில் 14 மாணவர்களும் திருக்கோவில் கோட்டத்தில் 40 மாணவர்களும் ஆலையடிவேம்புக் கோட்டத்தில்; 56 மாணவர்களும் இம்முறை புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தி பெற்றுள்ளதாகவும் அவர் கூறினார். மேலும், இவ்வலயத்தைச் சேர்ந்த தமிழ்மொழி மூலமான 02 மாணவர்கள் மாவட்ட மட்டத்தில் 184 புள்ளிகளைப் பெற்று இரண்டாம் இடத்திலுள்ளனர். திருக்கோவில் கோட்டத்திலுள்ள தம்பிலுவில் கலைமகள் வித்தியாலயத்தைச் சேர்ந்த கிருபாகரன் புவிராஜனும் ஆலையடிவேம்புக் கோட்டத்திலுள்ள திருவள்ளுவர் பாடசாலையைச் சேர்ந்த கனகராஜ் விதுர்காவுமே 184 புள்ளிகளைப் பெற்றுள்ளனர். இவ்வலயத்தில் 3 மாணவர்கள் 182 புள்ளிகளைப் பெற்றுள்ளதாகவும் அவர் கூறினார்.

அக்கரைப்பற்றில் 4 வியாபாரிகளுக்கு எச்சரிக்கை
NEWS BY - KIRUSHANTHAN
அம்பாறை, அக்கரைப்பற்று சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் சுகாதாரம் அற்ற முறையில் மரக்கறிகள் மற்றும் உணவுகளை விற்பனைக்கு வைத்திருந்த வியாபாரிகள்; 07 பேரை எச்சரித்துள்ளதாக சிரேஷ்ட பொதுச் சுகாதார அதிகாரி ஏ.எம்.பௌமி தெரிவித்தார். குறித்த பகுதியில் பொதுச் சுகாதார அதிகாரிகள் இன்று புதன்கிழமை சோதனை மேற்கொண்டனர்.
இதன்போது பாதையோரத்தில் விற்பனைக்காக வைத்திருந்த வற்றாளைக்கிழங்கு, சின்ன வெங்காயம், கருவாடு ஆகியவற்றைக் கைப்பற்றியதுடன், இவற்றை விற்பனைக்கு வைத்திருந்த 03 பேரை எச்சரித்துள்ளதாகவும் அவர் கூறினார். இதேவேளை, சுகாதாரம் அற்ற முறையில் காணப்பட்ட தேநீர்க் கடை உரிமையாளர்கள் 04 பேரை எச்சரித்துள்ளதுடன், தேநீர்க் கடை ஒன்றில் சுகாதாரம் அற்ற முறையில் கொத்துரொட்டிக்காக வைக்கப்பட்டிருந்த மாவைக் கைப்பற்றியதாகவும் அவர் கூறினார்.
ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற சிறுவர் தின நிகழ்வு
கடந்த
அக்டோபர், 1 அன்று உலகம் முழுவதும் கொண்டாடப்பட்ட சர்வதேச சிறுவர் தினத்தையொட்டி ஆலையடிவேம்பு
பிரதேச செயலகமும் கோளாவில் - 1, அம்மன் மற்றும் மறுமலர்ச்சி முன்பள்ளிகளும்
இணைந்து ஏற்பாடு செய்திருந்த சர்வதேச சிறுவர் தின ஒன்றுகூடலும் பரிசளிப்பு
வைபவமும் நேற்று (4) காலை ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தில் இடம்பெற்றிருந்தது.
Tuesday, 4 October 2016
புலமைப்பரிசில் பரீட்சைப் பெறுபேறுகள் வெளியாகின
தரம் -05 புலமைப்பரிசில் பரீட்சைப் பெறுபேறுகள் வெளியாகின
2015ஆம் ஆண்டுக்கான தரம் -05 புலமைப்பரிசில் பரீட்சைப் பெறுபேறுகள் வெளியாகியுள்ளதாக பரீட்சைத் திணைக்களம் அறிவித்துள்ளது. பரீட்சை பெறுபேறுகளை www.doenets.lk அல்லது www.results.exams.gov.lk. மேற்படி இணையத்தளங்கள் ஊடாக பார்வையிட முடியுமெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Subscribe to:
Posts (Atom)