Wednesday, 5 October 2016

அக்கரைப்பற்றில் 4 வியாபாரிகளுக்கு எச்சரிக்கை

NEWS BY - KIRUSHANTHAN

அம்பாறை, அக்கரைப்பற்று சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் சுகாதாரம் அற்ற முறையில் மரக்கறிகள் மற்றும் உணவுகளை  விற்பனைக்கு வைத்திருந்த வியாபாரிகள்; 07 பேரை எச்சரித்துள்ளதாக  சிரேஷ்ட பொதுச் சுகாதார அதிகாரி ஏ.எம்.பௌமி தெரிவித்தார். குறித்த பகுதியில் பொதுச் சுகாதார அதிகாரிகள் இன்று புதன்கிழமை சோதனை மேற்கொண்டனர்.

 இதன்போது பாதையோரத்தில் விற்பனைக்காக வைத்திருந்த வற்றாளைக்கிழங்கு, சின்ன வெங்காயம், கருவாடு ஆகியவற்றைக் கைப்பற்றியதுடன், இவற்றை விற்பனைக்கு வைத்திருந்த 03 பேரை எச்சரித்துள்ளதாகவும் அவர் கூறினார். இதேவேளை, சுகாதாரம் அற்ற முறையில் காணப்பட்ட தேநீர்க் கடை உரிமையாளர்கள் 04 பேரை எச்சரித்துள்ளதுடன், தேநீர்க் கடை ஒன்றில் சுகாதாரம் அற்ற  முறையில் கொத்துரொட்டிக்காக வைக்கப்பட்டிருந்த மாவைக் கைப்பற்றியதாகவும் அவர் கூறினார். 

No comments: