Friday, 14 October 2016

கல்வி நடவடிக்கைகள் ஆரம்பம்

NEWS BY- KIRUSHANTHAN
075 7196520



இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் கலை, கலாசாரப்பீடம், வர்த்தக முகாமைத்துவப்பீடம், இஸ்லாமிய கற்கைகள் அரபுமொழிப்பீடம் ஆகியவற்றின் இரண்டாம் பருவ கல்வி நடவடிக்கைகள் எதிர்வரும் 17ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழகத்தின் பதில் பதிவாளர் எம்.ஐ.நௌபர், இன்று வெள்ளிக்கிழமை (14) தெரிவித்தார்.
பிரயோக விஞ்ஞானபீடத்தின் கல்வி நடவடிக்கைகள் எதிர்வரும் 24ஆம் திகதி திங்கட்கிழமை ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.


விடுதி வசதிகள் வழங்கப்பட்டுள்ள கலை, கலாசார பீடம், வர்த்தக முகாமைத்துவ பீடம், இஸ்லாமிய கற்கைகள் அரபு மொழிப்பீடம் ஆகிய பீடங்களின் மாணவர்கள் 16ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாலை 05.00 மணிக்கு முன்னர் தமக்குரிய விடுதிகளுக்கு சமூகமளிக்கமாறும் அவர் கேட்டுள்ளார்.
பிரயோக விஞ்ஞான பீட மாணவர்கள் எதிர்வரும் 23ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாலை 05.00 மணிக்கு முன்னர் தத்தமது விடுதிகளுக்கு சமூகமளிக்குமாறு எம்ஐ. நௌபர் மேலும் தெரிவித்தார்.

No comments: