ஆலையடிவேம்பு பிரதேச செயலக அருள்மிகு ஸ்ரீ மகா கணபதி ஆலயத்தில் இடம்பெற்றுவரும் பன்னிரெண்டு நாள் மண்டலாபிஷேகப் பூஜைகளில் இன்றைய (31-03-2015, செவ்வாய்க்கிழமை) ஆறாம்நாள் பூஜையினை திருக்கோவில் உதவிப் பிரதேச செயலாளர் சீ.ஜெயரூபன் அவர்கள் சிறப்புற நடாத்திமுடித்தார்.
அதன்பின்னர் இடம்பெற்ற இன்றைய அன்னதான வைபவத்தினை அக்கரைப்பற்று – 8/3 ஐச் சேர்ந்த பௌலிஸ் தியாகராஜா அவர்கள் ஏற்பாடு செய்திருந்ததுடன், குறித்த அன்னதான வைபவத்தில் அருள்மிகு ஸ்ரீ மகா கணபதிப் பெருமானின் அடியவர்களும் சிறார்களும் ஆலையடிவேம்பு பிரதேச செயலக உத்தியோகத்தர்களும் கலந்து சிறப்பித்தனர்.
எம்பெருமானின் இன்றைய ஆறாம்நாள் மண்டலாபிஷேகப் பூஜையின் உபயக்காரரான திருக்கோவில் உதவிப் பிரதேச செயலாளர் சீ.ஜெயரூபன் மற்றும் அன்னதானத்தினை உவந்தளித்த பௌ.தியாகராஜா இருவருக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் அருள்மிகு ஸ்ரீ மகா கணபதி ஆலய பரிபாலன சபையின் சார்பில் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்வதுடன், அவர்களுக்கு எம்பெருமானின் திருவருள் கடாட்சம் நிறைவாய்க் கிடைக்கவும் பிரார்த்திக்கின்றோம்

No comments:
Post a Comment