Sunday, 5 April 2015

ஆலையடிவேம்பு ஸ்ரீ மகா கணபதி ஆலய சங்காபிஷேகம் இன்று (06)

  ஆலையடிவேம்பு என்.ஹரன் 


ஆலையடிவேம்பில் தெய்வீக நிகழ்வு… ஆலையடிவேம்பு பிரதேச செயலக அலுவலக முன்றலில் ஆகமமுறையிலான  ஏகதள விமானம் கொண்ட ஸ்ரீ மகாகனபதி ஆலய சங்காபிசேகப் பெருவிழா இன்று (06) திங்கட்கிழமை சிவஸ்ரீ .க.கு. சீதாராம் குரு தலைமையிலான குருமார்களால்  இடம் பெறுகின்றது.


”அப்பம் முப்பழம் அமுது செய் தருளிய தொப்பை யப்பனை தொழவினை யறுமே”  இந்த மகா கனபதி ஆலயம் 1992இல் தோற்று விக்கப்பட்டதுடன் ஆகம முறையிலான ஆலயம் 2013.09.06 ஆவணி 21ஆம் நாள் வெள்ளிக்கிழமை பிரதேச செயலாளர் வி.ஜெகதீசனால் சமய கிரியைகளுடன் அடிக்கல் நாட்டி வைக்கப்பட்டது

இதனைத் தொடர்ந்து இந்து கலாச்சார அலுவல்கள் தினைக்களம் பாரளுமண்ற உறுப்பினர் பி.எச்.பியசேன மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் பொது தனவந்தர்களின் கூட்டு நிதியில் ஆலயகட்டுமாணப்பனி ஆரம்பிக்கப்பட்டு கடந்த 25ம் திகதி (பங்குனி 15ம் நாள்) பிரதேச செயலாளர் வி.ஜெகதீசன் தலைமையில்  கும்பாபிஷேக குடமுளுக்கும் இடம் பெற்றது தொடர்ந்து 12 நாட்கள் மண்டலாமிஷேக பூசைகள் இடம் பெற்றதுடன் இன்று சங்காபிஷேகப் பெருவிழா இடம் பெறுகின்றது


No comments: