Monday, 17 November 2014

கிழக்கு இந்து ஊடகவியலாளர் ஒன்றியம் பூனாகலை விஜயம் !


News By :
V.Dinesh (Akkaraipattu)

அண்மையில் மண்சரிவினால் பாதிக்கப்பட்டு நிற்கதியாக்கப்பட்ட பதுளை, மீரியப்பெத்த அகதிகள் தங்கியிருக்கும்  பூனாகலை தமிழ் மகா வித்தியாலய இடைத்தங்கல் முகாமிற்கு கிழக்கு இந்து ஊடகவியலாளர் ஒன்றியம் நேற்றைய தினம் விஜயம் ஒன்றினை மேற்கொண்டிருந்தது. 






ஒன்றியத்தின்                          தலைவர்
வி.ரீ.சகாதேவராசா தலைமையில் மேற்கொள்ளப்பட்ட இவ்விஜயமானது மனித அபிவிருத்தி தாபனத்தின் அனுசரணையுடன் இடம்பெற்றது.

இதன்போது கிழக்கு மாகாண இணைப்பாளர் பி.ஸ்ரீகாந்த் ஏற்பாட்டில் காரைதீவு கிளையின் உறுப்பினர்களும் இதன்போது இணைந்து பாத்திக்கப்பட்ட மக்களுக்கு தமது ஆழ்ந்த அனுதாபங்களையும் , ஆறுதல்களையும் தெரிவித்திருந்தனர்.

  
இம்மக்களுக்காக  மனிதாபிமான உதவிகளான  நிவாரண பொதிகளையும் , சிறுவர்களுக்கான உடு துணிகளையும் கையளித்திருன்தனர்.

இவ்விஜயத்தின் போது மண்சரிவால் பாத்திக்கப்பட்ட குறித்த இடத்தினை சென்று பார்த்த ஊடகவியலாளர்கள் அடங்கிய இக்குழுவினர் இவ்விடத்தில் மண்ணுக்குள் மறைந்து உயிர் நீத்த உறவுகளுக்காக தமது அஞ்சலியினை செலுத்தியதுடன், அங்கிருந்து இல்லாமல் போன ஆலயத்தின் உடைந்த நிலையில் காணப்பட்ட முனியாண்டி சிலையினையும் பார்வையிட்டிருந்தனர். 



சம்பவ இடத்திற்கு அருகாமையில் இருந்து அனர்த்தத்திற்கு உள்ளாகாத மக்களையும் சந்தித்து உரையாடி அவர்களுக்கும் நிவாரண பொதிகளை வழங்கியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.



Sunday, 16 November 2014

இலவச கல்விக்கருத்தரங்கு .




அம்பாரை  மாவட்ட சிவில் பிரைஜைகள் சமூகத்தினர் நடாத்தும்  க.பொ.த சாதாரணதர மாணவர்களுக்கான இலவச கல்விக்கருத்தரங்கு .


2014ம் ஆண்டு  க.பொ.த சாதாரணதர பரிட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கான இலவச கல்விக்கருத்தரங்கு அம்பாரை மாவட்ட சிவில் பிரஜைகள் சமூகத்தினரால்  2014-11-06  இன்று ஞாயிற்றுக்கிழமை தம்பிலுவில் மத்திய மகாவித்தியாலயத்தில் ஆரம்பமானது இதன்படி ஏ.எல் றிஸ்வான் ஆசிரியர் அவர்களின் விஞ்ஞான பாடமானது செயல்முறை ரதியாகவும் இலகுவான முறைகளிலும் மாணவர்களுக்கு பெறுமதி மிக்கவகையில் வழங்கப்பட்டது .


இக்கருத்தரங்கில் திருக்கோயில் வலயத்திற்குட்பட்ட 05 பாடசாலைகளைச்சேர்ந்த சுமார் 120 மாணவர்கள் கலந்து கொண்டனர் இதன்போது அம்பாரை மாவட்ட சிவில் பிரஜைகளில் ஆலோசகரும் தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் ஆலோசகருமான விரிவுரையாளர் எஸ்.குணபாலன் அம்பாரை மாவட்ட  சிவில் பிரஜைகளில் சமூகத்தின் பதிவாளர் எஸ்.வரதராஜன் மற்றும் பாடசாலை அதிபர் எஸ் விஸ்வநாதன் பிரதி அதிபர் எஸ் .பி.நாதன் போன்றேர்கள் கலந்து கொண்டனர்.



Friday, 14 November 2014

ஆலையடிவேம்பில் திருடர்கள் கைவரிசை

ஹரன் 

ஆலையடிவேம்பு திவுக்காலை பகுதியில் பெண் ஒருவரின் பெறுமதிஉடைய தங்க தாலிக்கொடியினை மோட்டார் சைக்கிளில் வந்தவர்களால் அபகரித்த திருடர்கள் தப்பி ஓடினர்.
Displaying IMAG0001.JPG

தீவுக்காலை ஆலைய வீதியைச் சேர்ந்த 64 வயதுடைய வைரமுத்து அந்தோனியம்மா   இன்று வெள்ளிக்கிழமை காலை
வீட்டில் இருந்து அதே பகுதியில் உள்ள குறுக்கு வீதியில்  முருங்கை  இலை பறிப்பதற்காக சென்று கொண்டிடுந்த போது அவரை பின் தொடர்ந்து மோட்டார் சைக்கிளில் வந்து  கொண்டிடுந்த இருவர் அவரது கழுத்தில் இருந்த தாலிக் கொடியினை அபகரித்த திருடர்கள் தப்பி ஓடினர்.

இவரின் கூக்குரல் கேட்ட வீதியால் சென்று கொண்டிருந்தவர்கள் திருடர்களை பிடிக்க முற்பட்ட போதும் அவர்கள் தப்பித்துவிட்டனர்

இச் சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரனைகளினை அக்கரைப்பற்று பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்

உலக நீரிழிவு தினத்தினை முன்னிட்டு


vd;.`ud;
உலக நீரிழிவு தினத்தினை முன்னிட்டு ஆலையடிவேம்பு பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையின் ஏற்ப் பாட்டில் (14)  பிரதேச கலாச்சார மண்டபத்தில் 
Displaying SN850002.jpg Displaying SN850003.jpg Displaying SN850004.jpgDisplaying SN850001.jpg
 பொது மக்களுக்கான தொற்றா நோய் சம்பந்தமான விழிப்புனர்வு கருத்தரங்கினை சுகாதார வைத்திய அதிகாரிடொக்டர்.ஏ.ம்.முநொளப்பர் நடாத்துவதனையும் கலந்து கொண்டோரையும்  காணலாம்

Thursday, 13 November 2014

நாமல் கோளாவில் விஜயம்

 News.V.Dinesh (Akkaraipattu)

மஹநெகும திட்டத்தின் கீழ் புனரமைக்கப்ப ஆலையடிவேம்பு கோளாவில் காந்தி விளையாட்டுக்கழகத்தின் விளையாட்டு மைதானத்தை  விளையாட்டு வீரர்களின் பாவனைக்காக கையளிக்கும் நிகழ்வானது இன்று மாலை 3.00 மணியளவில் காந்தி விளையாட்டு மைதானத்தில் நடை பெற்றது .

இவ்விழாவிற்கு கௌரவ அதிதியாக அதிமேதகு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின்  புதல்வரும்இளைஞர்களுக்கான நாளைய அமைப்பின் தலைவரும் அம்பாந்தோட்டை பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ அவர்கள் வருகைதந்து  புதிதாக புனரமைக்கப்பட்ட மைதானத்தை திறந்து வைத்தார்.




Tuesday, 11 November 2014

பாசுபதேசுவரர் வித்தியாலயத்தில் புலமை பரிசில் பருட்சையில் சித்தி பெற்ற மாணவர்களை கெளரவிக்கும் நிகழ்வு

ஹரன்

அக்கரைப்பற்று பனங்காடு பாசுபதேசுவரர் வித்தியாலயத்தில் புலமை பரிசில் பருட்சையில் சித்தி பெற்ற மாணவர்களை கெளரவிக்கும் நிகழ்வு இன்று(12) புதன் கிழமை காலை 10.00 மணிக்கு அதிபர் கே.ஜெயந்தன் தலைமையில் இடம் பெறுகின்றது



இவ் நிகழ்வில் திருக்கோவில் வலயக்கல்வி பணிப்பாளர் ஆர்.சுகிர்தராயன் ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் வே.ஜெகதீசன் கோட்டக்கல்வி அதிகாரி வா.குனாளன் உட்பட மாணவர்களது பெற்றோர்களும் கலந்து சிறப்பிக்கின்றனர்.   

நாமல் ராஜபக்‌ஷ கோளாவில் பொது விளையாட்டு மைதானத்தினை திறந்து வைக்கவுள்ளார்

என்.ஹரன்


இளைஞர்களுக்கான நாளைய அமைப்பின் தலைவரும் ஹம்பாந்தோட்டை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்‌ஷ நாளை புதன் கிழமை 01.30 மணிக்கு ஆலையடிவேம்பு கோளாவில் பொது விளையாட்டு மைதானத்தினை திறந்து வைக்கவுள்ளார்

காந்தி விளையாட்டு கழக தலைவர் நா.நாகேந்திரன் தலைமையில் இடம் பெறும் இவ் நிகழ்வில் கற்றலில் வென்ற கோளாவில் முத்துக்களுக்கு மகுடம் சூட்டும் மங்களவிளாவும் சிறப்பாக இடம் பெறவுல்ளது  பிரதம அதிதிகளாக அம்பாரை பிரிவினா வண.ஏ.கே.சந்திரிய தேரர் தொழில் உறவுகள் பிரதி அமைச்சர் ரியர் அட்மிரல் சரத் வீரசேகர மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பி.பியசேன ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் வே.ஜெகதீசன் உட்பட பலரும் கலந்து கொள்ளவுள்ளனர்
  

நாளை திறந்து வைக்கப்படவுள்ள விளையாட்டு மைதானத்தின் ஒரு தேற்றம் தற்பொளுதும் மும்முரமாக வேலைகள் இடம் பெறுவதனை படம்களில் கானலாம்

Thursday, 6 November 2014

ஆலையடிவேம்பு நாவற்காடு கிராம வீதிகளை புனரமைப்பு செய்து தாருங்கள்

பெற்றோர்களுக்கான விழிப்புணர்வு அறிவூட்டல் கருத்தரங்கு

என்.ஹரன்

ஆலையடிவேம்பு பிரதேச இந்து மாமண்றத்தின் அனுசரனையில் நடாத்தப்பட்டு வருகின்ற அறநெறி பாடசாலை மாணவர்களது பெற்றோர்களுக்கான விழிப்புணர்வு அறிவூட்டல் கருத்தரங்கு 


பனங்காடு பாசுபதேசுவர வித்தியாலயத்தில் இன்று 07.11.2014  மாலை 04.00 மணிக்கு இடம் பெறவுள்ளது


யானையின் தக்குதலில் விவசாயி பலி

ஹரன்

ஆலையடிவேம்பு  பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட தோனிக்கல் இரண்டாத்துக்
கப்பு பகுதியில் தனது வயல் நிலத்திற்கு இரவு காவல் கடமையில் ஈடுபட்டுக்
கொண்டிருந்த ஆறுமுகம் இராசதுரை (ராசா) 55 வயதுடைய விவசாயி 590983233வி
நேற்றிரவு (04 செவ்வாய்க்கிழமை) யானையின் தக்குதலில் பலியானார்.


பனங்காடு வைத்தியசாலை வீதியினை சேர்ந்த மூண்று பிள்ளைகளின் தந்தையாவார்.

இப் பகுதியில் தொடர்சியாக யானையின் தாக்குதல் இடம் பெற்று வருவதும்,
பகுதியினை அன்மித்துள்ள சாந்திபுரம் கிராம குடியிருப்பு வீடுகள்
முழுவதும் யானையின் தாக்குதலால்  சேதமாக்கப்பட்டிருப்பதும்
குறிப்பிடத்தக்கது.

Tuesday, 4 November 2014

சொண்ட் நிறுவன இளைஞர் குழுவுடன் ”அனுபவபகிர்வு கள ஆய்வின் ” ஆரம்ப நிகழ்வினை

ஹரன்
தேசிய மொழிகள் திட்டத்தின் திருகோனமலை மாவட்டத்தினைச் சேர்ந்த  கந்தளாய் பிரதேச இளைஞர் சம்மேளன குழுவினர் நேற்று(04) செவ்வாக்கிழமை அக்கரைப்பற்று சொண்ட் நிறுவன இளைஞர் குழுவுடன் ”அனுபவபகிர்வு கள ஆய்வின் ” ஆரம்ப நிகழ்வினை நிறுவன நிகழ்ச்சி திட்ட இனைப்பாளர் த.விஜயகுமார் ஆரம்பித்து உரையாற்று வதனையும் கலந்துகொண்ட கந்தளாய் பிரதேச இளைஞர் சம்மேளன குழுவினரினையும் படத்தில் கானலாம்