ஹரன்
ஆலையடிவேம்பு திவுக்காலை பகுதியில் பெண் ஒருவரின் பெறுமதிஉடைய தங்க தாலிக்கொடியினை மோட்டார் சைக்கிளில் வந்தவர்களால் அபகரித்த திருடர்கள் தப்பி ஓடினர்.
தீவுக்காலை ஆலைய வீதியைச் சேர்ந்த 64 வயதுடைய வைரமுத்து அந்தோனியம்மா இன்று வெள்ளிக்கிழமை காலை
வீட்டில் இருந்து அதே பகுதியில் உள்ள குறுக்கு வீதியில் முருங்கை இலை பறிப்பதற்காக சென்று கொண்டிடுந்த போது அவரை பின் தொடர்ந்து மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிடுந்த இருவர் அவரது கழுத்தில் இருந்த தாலிக் கொடியினை அபகரித்த திருடர்கள் தப்பி ஓடினர்.
இவரின் கூக்குரல் கேட்ட வீதியால் சென்று கொண்டிருந்தவர்கள் திருடர்களை பிடிக்க முற்பட்ட போதும் அவர்கள் தப்பித்துவிட்டனர்
இச் சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரனைகளினை அக்கரைப்பற்று பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்
No comments:
Post a Comment