என்.ஹரன்
இளைஞர்களுக்கான நாளைய அமைப்பின் தலைவரும் ஹம்பாந்தோட்டை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான
நாமல் ராஜபக்ஷ நாளை புதன் கிழமை 01.30 மணிக்கு ஆலையடிவேம்பு கோளாவில் பொது விளையாட்டு
மைதானத்தினை திறந்து வைக்கவுள்ளார்
காந்தி விளையாட்டு கழக தலைவர் நா.நாகேந்திரன் தலைமையில் இடம் பெறும் இவ் நிகழ்வில்
கற்றலில் வென்ற கோளாவில் முத்துக்களுக்கு மகுடம் சூட்டும் மங்களவிளாவும் சிறப்பாக இடம்
பெறவுல்ளது பிரதம அதிதிகளாக அம்பாரை பிரிவினா
வண.ஏ.கே.சந்திரிய தேரர் தொழில் உறவுகள் பிரதி அமைச்சர் ரியர் அட்மிரல் சரத் வீரசேகர
மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பி.பியசேன ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் வே.ஜெகதீசன்
உட்பட பலரும் கலந்து கொள்ளவுள்ளனர்
நாளை திறந்து வைக்கப்படவுள்ள விளையாட்டு மைதானத்தின் ஒரு தேற்றம் தற்பொளுதும்
மும்முரமாக வேலைகள் இடம் பெறுவதனை படம்களில் கானலாம்
No comments:
Post a Comment