Monday, 17 November 2014

கிழக்கு இந்து ஊடகவியலாளர் ஒன்றியம் பூனாகலை விஜயம் !


News By :
V.Dinesh (Akkaraipattu)

அண்மையில் மண்சரிவினால் பாதிக்கப்பட்டு நிற்கதியாக்கப்பட்ட பதுளை, மீரியப்பெத்த அகதிகள் தங்கியிருக்கும்  பூனாகலை தமிழ் மகா வித்தியாலய இடைத்தங்கல் முகாமிற்கு கிழக்கு இந்து ஊடகவியலாளர் ஒன்றியம் நேற்றைய தினம் விஜயம் ஒன்றினை மேற்கொண்டிருந்தது. 






ஒன்றியத்தின்                          தலைவர்
வி.ரீ.சகாதேவராசா தலைமையில் மேற்கொள்ளப்பட்ட இவ்விஜயமானது மனித அபிவிருத்தி தாபனத்தின் அனுசரணையுடன் இடம்பெற்றது.

இதன்போது கிழக்கு மாகாண இணைப்பாளர் பி.ஸ்ரீகாந்த் ஏற்பாட்டில் காரைதீவு கிளையின் உறுப்பினர்களும் இதன்போது இணைந்து பாத்திக்கப்பட்ட மக்களுக்கு தமது ஆழ்ந்த அனுதாபங்களையும் , ஆறுதல்களையும் தெரிவித்திருந்தனர்.

  
இம்மக்களுக்காக  மனிதாபிமான உதவிகளான  நிவாரண பொதிகளையும் , சிறுவர்களுக்கான உடு துணிகளையும் கையளித்திருன்தனர்.

இவ்விஜயத்தின் போது மண்சரிவால் பாத்திக்கப்பட்ட குறித்த இடத்தினை சென்று பார்த்த ஊடகவியலாளர்கள் அடங்கிய இக்குழுவினர் இவ்விடத்தில் மண்ணுக்குள் மறைந்து உயிர் நீத்த உறவுகளுக்காக தமது அஞ்சலியினை செலுத்தியதுடன், அங்கிருந்து இல்லாமல் போன ஆலயத்தின் உடைந்த நிலையில் காணப்பட்ட முனியாண்டி சிலையினையும் பார்வையிட்டிருந்தனர். 



சம்பவ இடத்திற்கு அருகாமையில் இருந்து அனர்த்தத்திற்கு உள்ளாகாத மக்களையும் சந்தித்து உரையாடி அவர்களுக்கும் நிவாரண பொதிகளை வழங்கியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.



No comments: