Thursday, 6 November 2014

யானையின் தக்குதலில் விவசாயி பலி

ஹரன்

ஆலையடிவேம்பு  பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட தோனிக்கல் இரண்டாத்துக்
கப்பு பகுதியில் தனது வயல் நிலத்திற்கு இரவு காவல் கடமையில் ஈடுபட்டுக்
கொண்டிருந்த ஆறுமுகம் இராசதுரை (ராசா) 55 வயதுடைய விவசாயி 590983233வி
நேற்றிரவு (04 செவ்வாய்க்கிழமை) யானையின் தக்குதலில் பலியானார்.


பனங்காடு வைத்தியசாலை வீதியினை சேர்ந்த மூண்று பிள்ளைகளின் தந்தையாவார்.

இப் பகுதியில் தொடர்சியாக யானையின் தாக்குதல் இடம் பெற்று வருவதும்,
பகுதியினை அன்மித்துள்ள சாந்திபுரம் கிராம குடியிருப்பு வீடுகள்
முழுவதும் யானையின் தாக்குதலால்  சேதமாக்கப்பட்டிருப்பதும்
குறிப்பிடத்தக்கது.

No comments: