அம்பாறை
மாவட்ட இடர் முகாமைத்துவ மத்திய நிலையத்தின் ஏற்பாட்டில் ஆலையடிவேம்பு பிரதேச
இளைஞர்களுக்காக நடாத்தப்பட்ட ஒருநாள் முதலுதவிப் பயிற்சிச் செயலமர்வு ஆலையடிவேம்பு
பிரதேச செயலகக் கலாசார மண்டபத்தில் நடைபெற்றது.
அம்பாறை
மாவட்ட இடர் முகாமைத்துவ மத்திய நிலையத்தின் உதவிப் பணிப்பாளர் ஏ.எஸ்.எம்.ஸியாத்
தலைமையில் நடைபெற்ற இப்பயிற்சியினை ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் வி.ஜெகதீசன்
ஆரம்பித்துவைத்தார். இந்நிகழ்வில் மாவட்ட இடர் முகாமைத்துவ உதவியாளர்
சி.முகுந்தன், இளைஞர் சேவைகள் உத்தியோகத்தர் கே.பிரபாகரன் மற்றும் இடர் முகாமைத்துவ
அபிவிருத்தி உத்தியோகத்தர் ரி.தனராஜன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
இப்பயிற்சிக்கு
இலங்கைச் செஞ்சிலுவைச் சங்கத்தின் அம்பாறை மாவட்ட இடர் முகாமைத்துவத்திற்கான கள
உத்தியோகத்தரும் முதலுதவிப் பயிற்றுவிப்பாளருமான எஸ்.சசிதரன் வளவாளராகக்
கலந்துகொண்டு மூச்சுத்திணறல், மயக்கம், அதிர்ச்சி, மாரடைப்பு, எலும்பு முறிவு, நீரில்
மூழ்குதல், விஷக்கடிகள், வலிப்பு, தலையில் காயங்கள் ஏற்படும் பாரதூரமான நிலைமைகளின்போது
பாதிக்கப்படும் சிறுவர்கள், பராயமடைந்தோர் மற்றும் முதியவர்களுக்கு எவ்வாறு
முதலுதவிச் சிகிச்சைகளை அளிக்கலாம் என்பது தொடர்பில் தனித்தனியான பயிற்சிகளை வாய்மூல
விளக்கங்களுடனும் கலந்துகொண்ட இளைஞர், யுவதிகளின் பங்குபற்றுதலுடன் செய்துகாட்டினார்.
இம்முதலுதவிப்
பயிற்சிச் செயலமர்வில் ஆலையடிவேம்பு பிரதேச இளைஞர் கழகங்களைச் சேர்ந்த சுமார் 45 இளைஞர்
யுவதிகள் கலந்துகொண்டிருந்தனர்.
No comments:
Post a Comment