ஆலையடிவேம்பு பிரதேச செயலக முஸ்லிம் உத்தியோகத்தர்களால் கடந்த வாரம் நிறைவுற்ற புனித ரமழான் நோன்புப் பெருநாளைச் சிறப்பிக்கும் வகையிலும், தாம் நோற்ற நோன்பின் மகத்துவங்களை சக தமிழ், சிங்கள உத்தியோகத்தர்களோடு பகிர்ந்துகொள்ளும் வகையிலும் நடாத்தப்பட்ட விசேட ரமழான் சிறப்பு நிகழ்வு ஆலையடிவேம்பு பிரதேச செயலகக் கேட்போர் கூடத்தில் நேற்று (06) நடைபெற்றது.
ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் வேதநாயகம் ஜெகதீசன் தலைமைதாங்கிய இந்நிகழ்வில் கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர் எம்.ரி.ஏ.நாஹிப் நோன்பின் பெருமைகள் தொடர்பாக உரையாற்றினார். அத்துடன் பிரதேச செயலாளர் தனது சிறப்புரையில் பிரதேச செயலக உத்தியோகத்தர்களிடையே நிலவும் தோழமை உணர்வும் இவ்வாறான இன, மத ஐக்கியத்தினை வலுப்படுத்தக்கூடிய நிகழ்வுகளின் தற்காலத் தேவையும் தொடர்பாகத் தனது கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டார். அவரைத் தொடர்ந்து கணக்காளர் கே.கேசகன், பதவிநிலை உதவியாளர் ஏ.எல்.எம்.பஸீல், வாழ்வின் எழுச்சி அபிவிருத்தித் திணைக்கள மகா சங்கப் பணிப்பாளர் ரி.பரமானந்தம், சமுகசேவைகள் உத்தியோகத்தர் எஸ்.எம்.எம்.அமீன் ஆகியோரும் உரையாற்றினர்.
இந்நிகழ்வினைச் சிறப்பிக்கும் வகையில் அலுவலக அலுவலக முஸ்லிம், தமிழ் உத்தியோகத்தர்களின் ரமழான் குறித்த கலை நிகழ்ச்சிகளும் அரங்கேற்றப்பட்டன.
செய்தி: பிரதேச செயலகம், ஆலையடிவேம்பு.
No comments:
Post a Comment